புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2020)

தேவனுடைய ஆளுகை

பிலிப்பியர் 2:2

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களா யிருந்து, இசைந்த ஆத் துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷ த்தை நிறைவாக்குங்கள்.


ஜனநாயகம் என்னும் அரசாங்கத்தின் வடிவமைப்பை நாங்கள் யாவரும் அறிந்திருக்கின்றோம். பொதுவாக, தேர்தல் வழியாக மக்கள், அரசாங்க பிரதிநிதிகளை தெரிந்தெடுகின்றார்கள். அந்த அமைப்பிலே ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இருக்கும். அரச தீர்மானங்களும், சட்டதிட்ட ங்க ளும் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்படும். இத்தகைய அமைப்புக்கள் இன்று சபைகளிலேயும் அமுல்பபடுத்தப்பட்டிருக்கின் றது. அதாவது, பெரும்பான்மை வாக்கு களினாலே செயற்பாடுகள் முன்னெடு த்துச் செல்லப்படுகின்றது. பெரும்பா ன்மை யானோர் தேவ சித்தத்தை செய் வார்கள் என்பதே எதிர்பார்ப்பாக இரு க்கின்றது. அப்படியாக தேவ சித்தம் நிறை வேற்றப்பட்டால் நல்லது. இன் றைய தியானம் ஜனநாயகத்தை குறி த்ததல்ல, தேவனுடைய ஆளுகையை குறித்தது. தேவனுடைய ஆளுகை யிலே எதிர்கட்சிகள் இல்லை. பிதா வாகிய தேவனுடைய சித்தம் பரலோகத்திலே சம்பூரணமாக நடப்பிக் கப்படுகின்றது. அது போல இந்தப் பூமியிலே, என்னுடைய வாழ்க்கை யிலே, குடும்பத்திலே, சபையிலே, தேசத்திலே பிதாவாகிய தேவனு டைய திருச்சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும். கொரிந்து பட்டணத்தி லே இருந்த சபையில் வரங்கள் யாவும் நிறைவாக கொடுக்கப்பட்டி ருந்தது. தேவ உபதேசங்களை நன்றாக அறிந்திருந்தார்கள். (1 கொரி 1:5-7). ஆனால், அவர்கள் மத்தியிலே வாக்குவாதங்களும் பிரிவினை களும் இருந்தது. சபைக்குள்ளே பல குழுக்கள் இயங்கி வந்தது. கர்த் தர் ஒருவரே. அவருடைய ஆவியானவர் எங்களிலே வாசம் செய்தால், நாங்கள் இசைந்த ஆத்துமாக்களாய் ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ளுகின்றவர்களாக இருப்போம். எதிராளியாகிய சத்துருவா னவன், கோதுமைக்குள் களைகளை விதைத்து விட்டுப் போனான் என்று கர்த்தராகிய இயேசு ஒரு உவமையைச் சொன்னார். அந்தக் களை கள் சத்துருவினுடையவைகள். அவை தேவனால் உண்டானவைகள் அல்ல. இதை மையமாக வைத்து சபையையோ அல்லது மற்றவர்க ளையோ நியாயந்தீர்க்காமல், நாங்கள் அந்த களைகளாக மாறிவிடா மலும், தேவசித்தம் நிறைவேறுவதற்கு தடையான எதிர்கட்சியாக மாறி விடாமலும், எம் வாழ்வில் தேவ சித்தமானது நிறைவேறுவதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

ஆளுகை செய்யும் தேவனே> நீர் ஒருவரே எல்லாவற்றையும் அறிந்தவர். உம்முடைய திருச்சித்தம் நிறைவேறுவதற்கு தடையாக நான் போய்விடாதபடிக்கு என் ஆத்துமாவை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:20