புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2020)

பந்தையப்பொருளை பெற்றுக் கொள்ளும்படி

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொ ருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


குறித்த பட்டணத்தின் நவீன கட்டிடமொன்றிலே, இயங்கி வந்த ஒரு உதைபந்தாட்ட கழகத்தில், அதன் அநேக உறுப்பினர்களும் ஆதரவா ளர்களும் இருந்தார்கள். உதைபந்தாட்ட வீரர்களின் பயிற்சிக்கு தேவை யான இட வசதிகள் யாவும் தாராளமாக இருந்தது. சற்றுத் தொலை விலே இருக்கும் ஒரு சிறிய ஊர் ஒன்றிலே, எளிமையான வாழ்க்கை தரத்தையுடைய விளையாட்டு வீரர்களை கொண்ட உதைபந்தாட்ட குழு இயங்கி வந்தது. பட்டணத்திலே தங்கள் சொந்த கட்டிடம் மற்றும் மைதானத்திலே இய ங்கி வந்த உதைபந்தாட்ட குழுவைப் போல, சிறிய ஊரிலே இருந்த குழுவி னருக்கு அதிக வசதிகள் இல்லை. ஆனாலும், இந்த இரண்டு அணியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி யிடும் போது, அந்த ஊரிலே இயங்கி வந்த எளிமையான குழுவினர், எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள். அவர்கள் பிரபல்யமானவர்களல்லர். அவர்களுக்கு அநேக ஆதரவாள ர்கள் கிடையாது. ஆனாலும் அவர்கள் உதைபந்தாட்ட விளையாட்டிலே சிறந்து விளங்கினார்கள். சற்று இந்த சம்பவத்தை வைத்து எங்கள் ஆவிக்குரிய வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். தேவனாகிய கர்த்த ர்தாமே நாங்கள் இந்த உலகத்திலே வெற்றி வாழ்க்கை வாழும்படிக்கு பல ஈவுகளை கொடுத்திருக்கின்றார். ஆவியின் வரங்க ளை பகர்ந்து கொடுத்திருக்கின்றார். சில சபை ஐக்கியங்கள் பெரிதான நவீன தொழி நுட்ப கருவிகளுள்ள கட்டிடங்களிலே இயங்கி வருகின்றது. இவை யாவும் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தேவன் எங்களை ஆசீர் வதித்திருக்கின்றார் என்று கூறுவதற்காகவா? இல்லை! பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும்படியாகவே இவைகள் யாவும் ஈவாக கொடுக்க ப்பட்டிருக்கின்றது. அவருடைய சித்தத்தை நிறைவே ற்றுகின்றவர்களின் வாழ்க்கையிலே ஆவியின் கனி நிறைவாக இருக் கும். எனவே, தேவன் கொடுத்திருக்கும் இரட்சிப்பு மேன்மையானது. அதற்காக தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை எங்களு க்காக தந்தார். அவர் வழியாக தூய ஆவியை தந்திருக்கின்றார். உன்ன தத்திலுள்ள சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கி ன்றார். இவைகளை பெற்றிருக்கின்ற நாம், முற்றிலும், தேறினவர்களா னோம் என்ற எண்ணம் கொள்ளாமல், கிறிஸ்துவுக்குள் நமது பரம இல க்கை நோக்கி முன்னேறிச் செல்லுவோம்.

ஜெபம்:

ஈடு இணையற்ற தேவனே, ஒப்பற்ற, விலை மதிக்க முடியாத உம்முடைய திருக்குமாரனின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நான், அந்த மீட்பை அற்பமாக எண்ணாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 1:10