புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2020)

எல்லாரும் மனந் திரும்பவேண்டும்

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போ காமல் எல்லாரும் மனந் திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


கையும் களவுமாக ஒரு குற்றத்திலே அகப்பட்ட மனிதனை பொலிசார் கைது செய்து, நீதிமன்ற வழக்கின் நாள் வரைக்கும் மறியலிலே வைத்திருந்தார்கள். அவன் வாழ்ந்த அயலிலுள்ள மனிதர்கள், “பல நாள் கள்வன் ஒரு நாள் பிடி படுவான்” என்று கூறினார்கள். “செய்த குற்றங்களுக்குரிய தண்டனை பெறும் நாள் வந்துவிட்டது” என்று அவனுடைய உறவினரில் சிலர் கூறிக் கொண்டார்கள். “யாருடைய அறிவுரை க்கு செவி கொடுத்தான்” என்று நண்ப ர்களில் சிலர் கூறினார்கள். ஒருவேளை இவர்களுடைய கூற்றுக்கள் யாவும் உண்மையுள்ளவைகளாகவும், அவர்கள் அப்படி கூறுவதற்கு சரியான காரணங் களும் இருக்கலாம். ஆனால், நீதிமன் றத்திற்கு சென்றிருந்த அவனுடைய நண்பர்களிலொருவன், தன் நண்பன் செய்த குற்றத்தை மறைத்து மூடாமல், தன் நண்பனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கும்படியாகவும், அவனுக்கு இரக்கம் காட்டும்படியாவும் கண்ணீரோடு, நீதிபதியையும், வழக்கைத் தொடர்ந்த பொலிஸ்தாபனத்தையும் தயவாக வேண்டிக் கொண்டான். தன் நண்பன் அழிந்து போகக்கூடாது என்பதே அவனு டைய ஏக்கமாக இருந்தது. இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாரு ங்கள். எங்கள் உடன் சகோதர சகோதரிகளிலொருவர் குற்றத்தில் அகப் பட்டால் அதைக் குறித்து எங்கள் மனநிலை எப்படியாக இருக்கும்? அதே குற்றத்தில் நாங்கள் அகப்படிருந்தால் எங்கள் மனநிலை எப்படி யாக இருக்கும்? குற்றம் செய்தது உண்மையாக இருக்கலாம். குற்றம் செய்தவன் மனந்திரும்புவானோ இல்லையோ என்பது எங்களுக்கும் தெரியாது. ஒருவேளை இந்த அரச கட்டளைகளின்படி இந்த உலகத் திலே தண்டனைகள் கிடைக்கலாம். ஆனால், குற்றம் செய்தவனுடைய ஆத்துமாவின் முடிவு என்ன? ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்காக இயேசு தம்மைத் தாமே சிலுவையிலே பலியாக ஒப்புக் கொடுத்தார். ஒருவேளை ஒருவனை அவனது குற்றத் திற்கான தண்டனையிலிருந்த மீட்டுக் கொள்வது எங்கள் பெலனிற்கு அப்பாற்பட்ட காரியமாக இருக்கலாம். ஆனால் அவன் ஆத்துமா பாதா ளத்தில் அழிந்து போகாமல் மீட்படையும் வழியை உண்டாக்கும்படி தேவனை நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய நாள் வரும்வ ரைக்கும், இந்த சிந்தையுடன், நாம் ஜெபத்திலே தரித்திருப்போம்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, நான் உம்மை அறியாமல் பாவத் திலிருந்த நாட்களில் அழிந்து போகாதபடிக்கு காத்துக் கொண்டது போல யாவர்மேலும் உம்முடைய கிருபையை காண்பிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:8-13