புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2020)

மாசற்ற பிள்ளைகளாகயிருங்கள்

பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


எகிப்த்தின் அடிமைத்தனத்திலிருந்து, வாக்களிகப்பட்ட செழிப்புள்ள கானான் தேசத்திற்கு, மோசே என்னும் தேவ ஊழியர் ஊடாக, தேவ ஜனங்கள் வழிநடத்திக் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்கள் போகும் போது பல அந்நிய ஜனங்ளும் அவர்களோடே சேர்ந்து கொண்டார்கள். “பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்;. இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக் கக் கொடுப்பவர் யார்? நாம் எகிப் திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்ச ங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளை யும், வெண்காயங்களையும், வெள் ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடி ப்போகிறது. (எண் 11:-4-7) என்றார்கள். தூதர்கள் உண்ணும் அப்பமாகிய மன் னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிpக் கப்பண்ணி, வானத்தின் தானி யத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். (சங்கீதம் 78:25-26) ஆனாலும் இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். நாம் வாழும் இந்த உலகம் தேவனை அறியாத அந்நிய ஜனங்களால் நிறைந்திரு க்கின்றது. இந்த, கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற் றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளு மாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கி ப்பில்லாமலும் செய்யுங்கள். ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உல கத்திலே சுடர்களைப்போலப் பிரகாசியுங்கள் என்று பரிசுத்த வேதாக மத்திலே வாசிக்கின்றோம். நாம் கோணலும் மாறுபாடுமான சந்ததியா கவே பூமியில் இருந்தோம், தேவ கிருபை பிசன்னமானதினால் இரட்சி ப்பை பெற்றுக் கொண்டோம். எனவே, நாங்கள் இந்த சந்ததி அழிந்து போகாதபடிக்கு, அவர்களுடைய மனக் கண்கள் பிரகாசமடையும்படி ஜெபிக்க வேண்டும். ஆனால், பாவ உலகத்திற்கு அடிமைகளாக இரு க்கும் அவர்களின் மாம்ச இச்சைகள் எங்களை பற்றிக் கொள்ளா தபடி க்கு மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்மை அறியாத அந்நியர்கள் மத்தியிலே வாழும் நாங்கள் எப்போதும் விழிப்புள்ளவர்களாக வாழும்படிக்கு எங்கள் பிரகாசமுள்ள மனக் கண்களை மங்கிப் போகாதபடிக்கு காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 2 கொரி 4:4