புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2020)

எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்

1 கொரிந்தியர் 10:10

அவர்களில் சிலர் முறுமு றுத்து,சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அது போல நீங்களும் முறு முறுக்காதிருங்கள்.


ஒரு தகப்பனானவன், தன் மாதாந்த வருவாயிலே, தன் இரண்டு குமா ரர்களுடைய தேவைகளை சந்தித்து வந்தார். அவர்களில் மூத்தவ னோ, என் தகப்பனானவர், எனக்கு நன்மையையே செய்கின்றவர். தன் தேவைகளை எப்படியும் சந்திப்பார் என்று நிச்சயமுள்ளவனாகவும், நன்றியுள்ளவனாகவும் இருந்து வந்தான். இளையவனோ, முறுமுறுப்ப தினால் தான் வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ண முடையவனாக இருந்து வந்தான். அப்படியிருந்தும், தகப்பனானவர், தன் இளைய குமாரனுடைய தேவைகளை யும் சந்தித்து வந்தார். ஆண்டுகள் கடந்து சென்றபின்பு, இளையவனின் வாழ்க்கையில், தான் முறுமுறுப்பதால் எப்படியாவது எல்லாவற்றையும் பெற் றுக் கொள்கின்றேன் என்றிருந்த எண் ணம் சுபாவமாக மாற்றமடைந்து விட் டது. அவன் எப்போதும் தன் தகப்ப னானவரை பரீட்சித்து பார்க்கின்றவனாகவே இருந்தான். அதாவது, “மற்றய அயல்வீட்டிலுள்ள மாணவனிடம், புதிதான சைக்கிள் இருக்கி ன்றதே, என்னிடமோ கறள்கட்டிய பழைய சைக்கிள் இருக்கின்றதே” “அந்த மனிதனை பாருங்கள், தன் பிள்ளைகளுடைய பிறந்த தினத்தை எவ்வளவு சிறப்பாக நடப்பிக்கின்றான்?” “என்னுடைய நண்பனிடம் ஐந்து சோடி சப்பாத்துக்கள் உண்டு, நான் எங்கு சென்றாலும் ஒன்றையே அணிந்து கொண்டிருக்கின்றேன்” என்று எப்போதும் குறைகளை கூறு பவனாகவே இருந்து வந்தான். அவன் பேரில் அவன் தகப்பனானவர் பிரியமாக இருக்கவில்லை. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கானா னுக்கு சென்று கொண்டிருந்த தேவ ஜனங்களுக்கு வேண்டிய ஞான நன்மைகள் யாவையும் தேவனாகிய கர்த்தர் கொடுத்திருந்தார். எல்லா ரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோ டேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந் தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமா னபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந் தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்போதும் தங் களை நேசிக்கும் பரம தந்தையின் நேசத்திற்குப் பதிலாக, அவரை பரீ ட்சை பார்க்கும் சுபாவமுள்ளவர்களானார்கள். நாங்கள் அப்படியாக அழி ந்து போகாமல், எங்களை நேசிக்கும் பரம தந்தை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசமுள்ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, என்னிடத்திலுள்ளவைகள் என்னை போஷிக்கும் என்ற எண்ணத்துடன் வாழாமல், உம்மை நம்பி, ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:16