புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2020)

ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

ஏசாயா 46:3-4

தாயின் வயிற்றில் தோன் றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன், உங்கள் முதிர்வயதுவரை க்கும் நான் அப்படிச் செய் வேன்,;


வசதி நிறைந்த இளம் தம்பதியினர், தங்களுக்கு பிறந்த முதலாவது குழந்தையை அதிகமாக அன்பு செய்து, கண்மணியைப் போல காத்து வந்தார்கள். இந்த உலகத்திலே உள்ள எந்த உணவுப் பொருளை கொள்வனவு செய்யவும், உல்லாசமாக உலகத்தை சுற்றிப் பார்க்கவும் வேண்டிய ஐசுவரியம் அவர்களிடம் இருந்தாலும், தங்கள் குழந்தைக்கு, அந்தந்த மாதத்திற்கு என்ன தேவையோ, கொடுக்க வேண்டிய அளவின்படி கொடுத்து வந்தார்கள். கண்ட இடமெல்லாம் தங்கள் குழந் தையை எடுத்துச் செல்ல மாட்டார்கள். குறித்த காலத்திலே மறக்காமல், வைத் திய சோதனைக்காக எடுத்துச் செல் வார்கள். இப்படியாக தங்கள் குழ ந்தையைக் குறித்து கண்ணும் கருத் துமாக இருந்தார்கள். ஆம், பிரியமான வர்களே, நாங்கள் வானத்தையும் பூமி யையும் அதிலுள்ள யாவையும் படை த்த, சர்வ வல்லமையுள்ள தேவனு டைய பிள்ளைகளாக இருக்கின்றோம். அவருக்கு மேற்பட்ட அதிகாரம் எதுவு மில்லை. எல்லாம் அவருக்கு கீழ்பட் டிருந்தாலும், தம்முடைய பிள்ளைகளுடைய தேவை எதுவோ, அதை அவர் குறித்த நேரத்திலே நேர்த்தியாய் செய்து முடிக்கின்றவராயி ருக்கின்றார். சுத்தமான பசுப் பால் பருகுவது நல்லது. ஆனால் சுத் தமான பசுப்பால் தாராளமாக எங்களிடம் இருக்கின்றது என்று, அதை மிகையாக ஒரு சிறு பிள்ளைக்கு குடிக்க கொடுக்க முடியுமா? ஒரு பிள் ளையின் தேவையின்படியே பெற்றோர்கள் பாலைக் குடிக்கக் கொடு ப்பார்கள் அல்லவா? இனிப்பான பதார்த்தங்கள் மிகவும் சுவையானது. அவற்றை விரும்பாத பிள்ளைகள் யார்? ஆனாலும், பிள்ளையானது விரும்பியபடி இனிப்பான பதார்த்தங்களை தன் இ~;டப்படி சாப்பிடு ம்படி எந்த பெற்றோர் விட்டு வைப்பார்கள்? அன்புள்ள பெற்றோர் ஒரு வரும் அப்படிச் செய்வதில்லை. எனவே, எங்களை உண்மையாக நேசி க்கின்ற எங்கள் பரம பிதா எங்கள் தேவைகள் என்ன என்று அறிந்திரு க்கின்றார். தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கின தேவன், நரைவயது மட்டும் உங்களைத் தாங்கி, ஏந்தி, சுமந்து, தப்புவி த்து நடத்திச் செல்வார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற பரம தந்தையே, என்னுடைய தேவை என்ன என்பதை நீர் அறிந்திருக்கின்றீர். நான் எப்போதும் உம்மிலே பெலன் கொண்டவனா(ளா)ய், வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:8