புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2020)

தந்தையின் குண இயல்புகள்

மத்தேயு 5:45

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக் கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;


“கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபை யுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்க ட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவரு டைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்கு க்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக் கினார்.” இந்த வார்த்தைகள் யாவரு க்கும் பிரியமானவைகள். இந்த வார்த் தைகளின் பலனை நாங்கள் நாள் தோறும் அனுபவித்து வருகின்றோம். இவை எங்கள் பரலோக தந்தையின் குண இயல்புகள். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ள வர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்ப ண்ணுகிறார். நாங்கள் குற்றம் செய்யும் போது, அந்த குற்றத்திற்குரிய தண்டனையை பெறாமல், மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, எங்கள் பரலோக தந்தையின் இரக்கத்தைக் குறித்து பெரு மகிழ்ச்சிய டைகின்றோம். எப்போதும் நாங்கள் பெற்றுக் கொள்ளும் பிள்ளைக ளாகவே இருந்து விட முடியாது. நாங்கள் பெற்றுக் கொண்ட ஈவை மற்றவர்களுக்கு கொடுப்பவர்களாக மாறிவிட வேண்டும். எங்கள் பரலோக தந்தை உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவராக இருப்பது போல நாங்களும் எங்களுக்கு எதிராக குற்றங்களை செய்கின்றவர்கள் மேல் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யு ங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படு த்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; என்றும், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா “பூரண சற்குணராயிரு க்கிறதுபோல”, நீங்களும் “பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்றும் இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய திவ்விய சுபாவங்களினால் உண்டாகும் பலன் என் வாழ்வில் சுபாவமாக மாறும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 17:21