புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2020)

இருதயத்தின் வேண்டுதல்கள்

சங்கீதம் 37:4

கர்த்தரிடத்தில் மனமகிழ் ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுத ல்களை உனக்கு அருள் செய்வார்.


கடந்த சில மாதங்களாக, கிழமைக்கு ஒரு தடவை உபவாசம் இரு ந்தேன். தவறாமல் ஞாயிறு தோறும் ஆலயத்திற்குச் சென்று வந்தேன். ஏழை எளியவர்களுக்கு அன்னதானங்களை வழங்கினேன். காணிக்கைக ளை ஒழுங்காகக் கொடுத்தேன். ஆனால் ஆண்டவர் என் விண் ணப்பத்தைக் கேட்கவில்லை என்று ஒரு மனிதன் சலிப்படைந்து, தான் செய்து வந்த கிரியைகளை நிறுத்தி விட்டான். அதாவது, தான் விரும்பும் நேரத்திலே, இக் கிரியைகளை செய் யும் போது, தன்னுடைய விண்ணப்பம் எதுவாக இருந்தாலும் அதை ஆண் டவர் கேட்க வேண்டும் என்பதே அந்த மனிதனுடைய எண்ணமாக இருந்தது. “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரி யைகளினால் உண்டானதல்ல.” விலைமதிக்க முடியாத இரட்சிப்பு தேவ கிருபையினாலே எங்களுக்கு ஈவாக அளிக்கப்பட்டிருக்க, நாங்கள் மறுபடியும் எங்கள் சொந்த கிரியைகளினாலே தேவனை பிரியப் படுத்தக் கூடுமோ? எங்கள் இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணிப்ப தாலேயே நாங்கள் தேவனை பிரியப்படுத்த முடியும். அர்ப்பணிப்பற்ற இருதயம் பண்பட்ட நிலம் அல்லவே. அங்கே தேவனுடைய வார்த்தை நிலைத்திருக்காது. தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட இருதயம் பண்பட்ட நிலம், அங்கே தேவனுடைய வார்த்தை பெரும் பலனை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட இருதயத்திலிருந்து வரும் நற்கிரி யைகளிலே தேவன் பிரியமாக இருப்பார். அப்பொழுது எங்கள் உபவாசமும், ஆராதனையும், தான தர்மங்களும் தேவனுக்கு சுகந்த வாசனையாக இருக்கும். கர்த்தரே என் தேவன் என்ற அசையாத நம்பி க்கை எங்கள இருதயத்தில் இருக்க வேண்டும். எங்கள் வாழ்க்கையில் என்னதான் நடந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும் இவரே என் தேவன், இவரிலே நான் மனமகிழ்ச்சியாய் இருப்பேன் என்பதே அந்த அசையாத நம்பிக்கை. தன் பிள்ளைகளின் தேவைகளை அறிந்த தேவன், குறித்த நேரத்தில் அவைகளை நேர்த்தியாக செய்து முடிக்கின்றவராக இருக்கி ன்றார். எனவே, முதலாவதாக எங்கள் இருதயத்தை தேவனுக்கு அர்ப் பணித்து, அவரிலே மன மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

என் தேவைகளை அறிந்த தேவனே, உம்முடைய நேரத்திலே என் தேவைகள் யாவையும் நீர் சந்திக்கின்றீர் என்ற திட நம்பிக்கையோடு உமக்காக காத்திருக்கும் பெலனை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆபகூக் 3:17-19