புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2020)

வழக்கமான வாழ்க்கை

சங்கீதம் 139:2

என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.


ஒரு தேசத்தை அரசாண்ட ராஜா, முன்குறிக்கப்பட்ட தினங்களிலே தன் ராஜ்யத்திலிருக்கும் ஊர்களுக்கு தன் தூதுவர்களை அனுப்புவது வழக் கமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட ஊருக்கு தூதுவர்கள் வருகை தரும் போது, அந்த ஊரிலே சில நாட்கள் தங்கியிருந்து, அந்த ஊரின் விவகாரங்களைக் குறித்து ஆராய்ந்தறிந்து, ராஜாவிற்கு தங்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அத னால், எந்த ஊருக்கு ராஜாவின் தூது வர்கள் போகின்றார்களோ, அந்த ஊரி லுள்ள பலர் குறிப்பிட்ட தினத்திற்கு முன் னதாகவே தங்கள் வாழ்க்கை முறை யை மாற்றிவிடுவார்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நீதிமான்க ளாகவும், தங்கள் வீடு வாசல்களை யும் சுத்தம் செய்து செம்மையாகவும் வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட நாட்க ளுக்கு எவருமே மதுபானம் அருந்துவதையும், புகைப்பிடிப்பதையும் தவிர்த்துக் கொள்வார்கள். ஏனெனில், ராஜாவின் ஆதரவை தங்கள் ஊர் பெற வேண்டுமாயின் தங்கள் நடவடிக்கைகள் யாவும் ராஜாவுக்கு உகந்ததாக காணப்பட வேண்டும். ராஜாவின் தூதுவர்கள் குறிப்பிட்ட ஊரைவிட்டு சென்று விடுகின்ற சில நாட்களில் அவர்கள் மறுபடியும் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். இப்படிப்பட்ட வர்கள் தாங்கள் விரும்பும் காரியம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்க்கை முறைமைகள் செம்மையானது என காண்பித்துக் கொள்கின்றார்கள். இவ்வண்ணமாகவே, இன்று பல மனி தர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு தங்களை பக்தியுள்ளவர்கள் என்று காண்பித்துக் கொள் ளும்படிக்கு, தங்கள் வாழ்க்கை முறைமைகளை மாற்றிக் கொள்கின் றார்கள். நாட்கள் நிறைவேறியதும் தங்கள் வழமையான பிரமாணிக்கம ற்ற வாழ்க்கை முறைக்குச் சென்றுவிடுகின்றார்கள். உம்முடைய ஆவி க்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர் என்று சங்கீதப் புத்தகத்திலே வாசிக்கின்றோம். நாட்களுக்கு தக்கதாக எங்கள் வேஷத்தை மாற்றுவதால் வரும் பலன் அற்பமே. எப்போதும் தேவனு க்கு பிரியமாக வாழ்வதே எங்கள் வழக்கமான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், எப்போதும் உமக்கு பிரியமுள்ள வாழ்க்கையை வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2