புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2020)

ஏற்ற சமயத்தில்

எபிரெயர் 4:16

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடைய வும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.


தன் நண்பர்களுடன் உதை பந்தாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய மகனின் காலிலே ஏற்பட்டிருக்கும் சிறு காயத்தை கண்ட தகப்பனார், அய லிலுள்ள வைத்தியரிடம் சென்று காயத்திற்குரிய மருந்தை பெற்றுக் கொள்ளும்படி கூறினார். “அப்பா, இப்படியாக முன்பு பல காயங்கள் ஏற்பட்டிருக்கின்றது, சில நாட்களில் இதுவும் காய்ந் துவிடும்” என்று மகனானவன் தன் தகப்பனுக்கு மறு உத்தரவு கூறினான். இது சிறு காயந்தான், ஆனால் அது ஏற்பட்டிருக் கும் இடம் நல்லதல்ல எனவே தாம திக்காமல் வைத்தியரிடம் செல்லும்படி தகப்பன் வலியுறுத்தினார். வாலிப பிர யாத்திலிருந்த மகன், தகப்பனைத் திரு ப்த்திப்படுத்தும்படி, நான் நாளை போகி ன்றேன் என்று கூறிச் சென்றுவிட்டான். ஆனால் அவன் வைத்தியரிடம் செல்ல வில்லை. சில நாட்கள் கடந்ததும் அந்த புதுக் காயமானது, மனைந்து பழைய புண்ணாக மாறியதால், தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் அதிகரித்தது. இரவோடு இரவாக அவசர சிகிச்சை நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். பல நாட்களாக வீட்டிலே தரித்திருந்து, குறித்த மருந்துளை எடுத்து வந் தான். பல தடவைகள் வைத்தியரை சந்திக்கும்படி சென்று வந்தான். ஏன் இந்த நிலைமை? தந்தையின் ஆலோசனையைக் கேட்டு, அவன் அயலிலுள்ள வைத்தியரை ஏற்ற சமயத்தில் சந்தித்திருந்தால் அவன் இவ்வளவாய் துன்பப்படத் தேவையில்லை. பிரியமானவர்களே, ஆகை யால், தங்கள் மனக் கடினத்தினால், தேவனுடைய ஆலோசனைக்குச் செவிகொடுக்காமல், கீழ்ப்படியாமையினாலே தேவன் நிச்சயித்திருந்த இளைப்பாறுதலிலே பிரவேசிக்காமல் அழிந்து போன முன்னோர்களைப் போல வாழாமல், மிகவும் ஜாக்கிரதையுள் ளவர்களாக வாழ்ந்து, தேவ இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். ஏனெனில், நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிரு க்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். காலத்தை தாமதிக்காமல் அவரையே பின்பற்றிச் செல் லுங்கள்.

ஜெபம்:

கிருபையுள்ள ஆண்டவரே, உம்முடைய கிருபையின் நாட்களை வீணாக்காதபடிக்கு, ஏற்ற சமயத்தில் உம்முடைய ஆலோசனையின் வழியில் நடந்து முன்னேற ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 5:19-20