புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2020)

காருண்யமுள்ள கர்த்தர்

எரேமியா 31:3

ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத் தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்.


ஒரு மனிதனானவன் பல குற்றங்களைச் செய்து வந்ததால் சமுதாயத்தா லும், தன் சொந்த குடும்பத்தாலும் தள்ளிவிடப்பட்டிருந்தான். பல எதிர் ப்புக்கள் மத்தியிலும் அவனுடைய தாயாரோ, அவனை சந்திக்கும் போதெல்லாம், மகனே, சுகமாய் இருக்கின்றாயா? சாப்பிட்டாயா? என்று அவனை விசாரித்து அவனுக்கு ஆகாரம் கொடுப்பாள். தான் தெரிந்து கொண்ட வழிகளினால் பல துன்பங்க ளை அனுபவித்த மனிதன், பல ஆண்டு கள் சென்ற பின்பு, தன் தாயாரின் அன்பை நினைத்து மனம் உடைந்து போனான். அம்மா, ஊர்; முழுவதும் என்னை பகைக்கும் போது, நீ என்னை குறித்து இன்னும் ஏன் கரிசனையாக இருக் கின்றாய் என்று தன் தாயாரிடம் கேட்டான். மகனே, நீ உயிரோடிருக்கும் வரைக்கும் உன்னைக் குறித்த நன்மை யான முடிவையே நான் விரும்புகின்றேன் என்று தாயார் மறுமொழியாக கூறினார். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவ தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட் டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண் டார்கள்.” கர்த்தர் இல்லாத வாழ்வு வறண்ட நிலம். கனியற்ற வாழ்க்கை. அதனால் அவர்கள் பாழ்கடிப்பும், அழிவுகளையும் தெரிந்து கொண் டார்கள். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொ ண்டு போகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு இதை நேரிடப்பண்ணினாய் என்று எரேமியா தீர்கதரிசியின் நாட்களிலே, தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களைக் குறித்து கூறினார். தேவனானவர் அவர்களை முற்றாகத் தள்ளிவிடவில்லை. அவர்களை மறுபடியும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார். நாங்கள் சேவி க்கின்ற தேவன் தம்முடைய ஜனங்களின் அழிவைக் காண ஒரு போதும் விரும்புவதில்லை. நித்திய சமாதானத்தின் வாழ்வுக்கென்றே அவர் எங்க ளையும் அழைத்திருக்கின்றார். அவர் எங்கள் மேல் வைத்த ஸ்நேகம் அரை வழியில் ஆரம்பித்ததல்ல. அநாதி ஸ்நேகத்தால் எங்களை நேசிக் கின்ற தேவன், தாயின் கருவினிலே எங்களை முன்குறித்தவராயிருக்கி ன்றார். நாங்கள் வழி தவறிச் செல்லும் போது அவருடைய காருண்ய த்தினால் மறுபடியும் இழுத்துக் கொள்கின்றார். எனவே இனி எனக்கு வாழ்வு இல்லை என்று பின்னிட்டு சோர்ந்து போகாமல், சீக்கிரமாக அன்புள்ள தேவனிடத்தில் திரும்புங்கள்.

ஜெபம்:

காருண்யம் நிறைந்த தேவனே, வாழ்வின் பின்னடைவுகளைக் கண்டு நான் சோர்ந்து போய்விடாதபடிக்கு, உம் அன்பின் ஆழத்தை உணர்ந்து உம்மண்டை சேர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:16