புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2020)

நிலையற்ற வாழ்வில் நிலையான அன்பு

ரோமர் 8:39

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிரு ஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.


ஒரு குழந்தையானது பிறந்த நாளிலிருந்து தன் தாயைப் பற்றிக் கொண்டிருக்கும். அதுபோல பெற்றோரும் புதிதாக பிறந்த தங்கள் குழ ந்தையை நேசித்து, கண்மணி போல பாதுகாக்கின்றார்கள். தங்கள் பெற்றோரே தங்களுக்கு எல்லாம் என் றிருந்த பிள்ளைகள், அவர்களுடைய நாட்கள் வரும் போது, தாய் தந்தை யரைக் குறித்த அன்பு அவர்களிடம் இருந்தாலும், கணவன் மனைவியை யும், மனைவி கணவனையும் பற்றிக் கொள்கின்றார்கள். சில ஆண்டுகளிலே அவர்கள் இருவரும் தங்கள் குழந் தைகளை முதன்மைப்படுத்துகின்றார் கள். பெற்றோராக இருந்தவர்கள் தங் கள் முதிர்வயதை அடைந்து, தங்கள் பேரப்பிள்ளைகள் மேலே தங்கள் பாசத்தை பொழிகின்றார்கள். பிறந்த நாளிலிருந்து இந்த உலகத்தை கடந்து செல்லும் நாள்வரைக்கும் ஒவ்வொருவருடைய நாட்டமும் நம்பிக்கை யும் மாறிக் கொண்டே போகின்றது.இப்படியாக மனிதர்களுடைய வாழ் க்கைவட்டம் அமைந்திருக்கின்றது. இதற்கு எவருமே விதிவிலக்கான வ ர்கள் அல்ல. ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்லும் போது, மனிதன் நம்பியிருந்த காரியம் நம்பிக்கையற்றதாக மாறிவிடுகின்றது. அதாவது, பிள்ளைகள் பெற்றோருக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றார்கள் அல்லது பெற்றோர் தம் பிள்ளைகளை முற் றாக கைவிட்டுவிட்டார்கள் என்பது பொருள் அல்ல. மாறாக இந்த உலக த்திலே எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. சில வேளைகளிலே நாங்கள் முழு மனதோடு எங்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் பிள்ளைகளுடைய பெலனானது பல கார ணங்களால் மட்டுப்படுத்தப் படுகின்றது. அதே போல, எல்லா சூழ் நிலைகளிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலையைக் குறித்து துக்கமடையா மலும், பெற்றோரை குறித்த கசப்பு பிள்ளைகளின் மனதில் ஒட்டிக் கொள்ளாமலும், பிள்ளைகளை குறித்த கசப்பு பெற்றோர் மனதிலே ஒட்டிக் கொள்ளாமலும், நிலையற்ற மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நிலையான அன்பு, “இயேசுவின் அன்பு” என்பதை நல் மனதுடன் நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, மனிதர்களுடைய அன்பு அவர்க ளுடைய பெலனுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றதென்பதை உணர்ந்து இயேசுவை பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16