புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 30, 2020)

விலைமதிக்க முடியாத அழைப்பு

எபிரெயர் 2:4

தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்ட னைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.


வருடம் முழுவதும் பாடசாலையில் கொடுக்கப்படும் பாடங்களை படிக்காமலும், வீட்டு வேலைகளை செய்யாமலும், வருட இறுதியிலே ஒரு சில நாட்கள்மட்டுமே படித்து, ஆண்டிறிதிப் பரீட்சையில் சித்தி பெற முடியு மானால் அதையே பல மாணவர்கள் விரும்புவார்கள். அப்படி விரும்புகின்றவர்கள், தாங்கள் படிக்க வேண்டிய காலத்திலே படிக்கா மல், வருடம் முழுவதும் என்ன செய்ய விரும்புகின்றார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்? இவ்வண்ணமாகவே, வாழ்க்கையில் என்னத்தை அனுபவித்தோம் என்ற சிந்தனையானது இரட்சிப்படை ந்த தேவ பிள்ளைகளின் மனதிலே அவ் வப்போது எழுவதுண்டு. இன்னும் சில காலம் கழித்து கிறிஸ்துவை அறிந்தி ருந்தால் எத்தனையோ காரியங்களை அனுப வித்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்போது அதை உடனடியாக வேரோடே பிடுங்கி உங்களது சிந்தை யை விட்டு அகற்றி விடுங்கள். கர்த்தரா கிய இயேசு கிறிஸ்துவை சொந்த இர ட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பு இப்படியான சிந்தனைகளுக்கு மனதார இடங் கொடுப்போமென்றால், நாங்கள் மாம்சத்திற் கேற்றபடி சிந்திக்கின்றவர் களாக இருப்போம். அந்த சிந்தையானது விதையாக எங்கள் இருதயத்தில் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, குறித்த காலத்தில் இச்சையை நிறைவேற்றும். தேவனுக்கு விரோதமாக எங்கள் மனதில் தோன்றும் எந்த எண்ணத்தையும் இயேசுவின் நாமத்தில் கீழ்ப்படுத்தி ஜெயம் எடுக்க வேண்டும். விலைமதிக்க முடியாத தேவனுடைய இரட்சிப்பின் மேன்மையை உணரும்படியாக எங்கள் மனக் கண்கள் பிரகாசமுள்ள தாக இருக்கும் போது நான் இந்த ஆண்டு அல்ல ஆரம்பத்திலேயே இர ட்சிப்படைந்திருந்தால் எவ்வளவு அதிக நன்மையாக இருந்திருக்கும் என்ற வாஞ்சை உள்ளத்தில் உண்டாகும். பிரியமானவர்களே, ஈடு இணையில்லாத மகிமையிலே பிரவேசிக்கும்படி உன்னதமான அழைப்பை பெற் றிருக்கின்றோம். தேவனுடைய கிருபையினாலே அந்த இரட்சிப்பைக்குறி த்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு தப்பித்துக் கொள் ள முடியாது. எனவே கருத்தோடு எங்கள் வாழ்க்கையை வாழ்வோமாக.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, நீர் எங்களுக்கு தந்திருக்கும் இரட்சிப்பை அற்பமாக எண்ணாதபடிக்கு, கருத்தோடு உணர்வுள்ள வாழ்க்கை வாழும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5