புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2020)

ஞானமார்க்கம்

நீதிமொழிகள் 4:11

ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைக ளிலே உன்னை நடத்தி னேன்.


இருதயத்தை காத்துக் கொள்ளும் வழி முறைகளை குறித்து நீதிமொ ழிகளின் புத்தகத்திலே கூறப்பட்ட சில அறிவுரைகளை ஆராய்ந்து பார்ப்போம். வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலை நிறுத்தப்படும். ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். இவைகள் மனிதனுடைய பெலத்தினாலே உண்டாகுவதில்லை. இவை தேவ ஆவியினாலே அருளப்ப டுபவைகள். தேவனாகிய கர்த்தருக்கு பயப்படும் பயமே இவைகளின் ஆரம் பம். கர்த்தருக்கு பயப்படுதல் எதி னாலே உறுதி செய்யப்படும்? கர்த்தரு டைய வார்த்தையின் வழியிலே மன தார நடப்பவன் கர்த்தருக்கு உரிய கன த்தை கொடுத்து, பயபக்தியோடு அவரை சேவிக்கின்றான். உன் இருத யம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது. என் கட்டளைக ளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். என்று தாவீது ராஜா தன் குமாரனாகிய சாலமோனுக்கு கூறினார். “ஞான மார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.” தேவனாகிய கர்த்திரிடத்தில் தான் கண்டு கொண்ட ஞானமார்க்கத்தை தன் மகனுக்கு போதித்து, தேவனுடைய செவ்வை யான பாதைகளிலே தன் மகனை நடத்தி வந்தார். மேலும் அவர் கூறு கையில்: நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி. என் வசன ங்களுக்கு உன் செவி யைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக. அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக் கொள். அந்த ஞான வார்த்தைகள் என்ன? எங்கள் பேச்சு, எங்கள் பார்வை, எங்களது நடைகள் யாவும் தேவ வார்த்தையின்படி அமைய வேண்டும். தேவனு டைய வார்த்தைகளே எங்கள் பாதுகாப்பான எல்லை. எனவே நாம் செம்மையான இருதயமுள்ளவர்களாய், தேவனுடைய ஆளுகைக் குள் வாழும்படி, தேவ வசனத்தினால் இருதயத்தை நிரப்பி, நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். தேவ வார்த்தையின் வழியில் நட க்கும் போது, தேவ ஞானத்தை கண்டடைகின்றோம். தேவனுடைய வழியே ஞானமார்க்கம். செம்மையாவர்கள் அந்த வழியில் நடக்கின் றார்கள். அதனால் அவர்கள் தங்கள் இருதய த்தை காத்துக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, என் இருதயத்தைக் காத்துக் கொள் ளும் உம்முடைய வார்த்தையை பற்றிக் கொண்டு, அந்த ஞானமார்க்த்தின் வழியிலே நடக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:11-14