புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 28, 2020)

பெலவீனங்களை மேற்கொள்ளுவோம்

எபேசியர் 6:10

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


கடந்த இராத்திரியிலே பண்ணையின் கோழிக் கூட்டிற்குள் உட்புகுந்து கோழிக் குஞ்சு ஒன்றை பிடித்துச் சென்ற மரநாய் மறுபடியும் திரும்பி வரும் என்பதை பண்ணையாளர் உறுதியாக அறிந்திருந்தார். ஆனாலும், கோழிக்கூட்டை வார இறுதியிலே திருத்திக் கொள்வோம் என்று மற்ற அலுவல்களிலே ஈடுபட்டிருந்தார். அடுத்த சில தினங்களில் ஒன்றல்ல, சில மரநாய்கள் வந்து பல கோழிக் குஞ்சுகளை கொன்று போட்டது. இவ்வண்ணமாகவே எங்கள் ஆவிக்குரிய யுத்தத்தில் எதிராளியாகிய பிசாசான வன் செயற்பட்டு வருகின்றான். “அசு த்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புற ப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்” என்று இயேசு கூறியிருக்கின்றார். பொது வாக மனிதர்கள், பாவத்திற்கிட்டுச் செல்லும் தங்கள் பெலவீனங்களை பாரா முகமாகவிட்டுவிடுகின்றார்கள் அல்லது இதை பார்த்தால் என்ன குறை? அதை கேட்டால் என்ன குற்றம்? இப்படி உடுத்தினால் என்ன தவறு என்று தங்கள் பெலவீனங்களை நியாயப்படுத்துகின்ற காலமாக இருக்கின்றது. அது மட்டுமல்ல, பகை, வன்மம், வைராக்கியம், பிரி வினை போன்ற மாம்சத்தின் கிரியைகளை மனிதர்கள் மனதில் ஒளித்து வைத்திருக்கின்றார்கள். அவை சில காலம் மறைந்திருந்து, குறித்த காலத்தில் அது வெளிப்படும். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடு மல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. நாங்கள் எங்கள் பெலவீனங்களைக் குறித்து கவனமற்றவர்களாக, பாராமுகமாக இருப்பதனால், எதிராளியானவன் அதை பாராமுகமாக விட்டு விடுவ தில்லை. எனவே, பெலவீனங்களை பாராமுகமாகவிட்டுவிடாமல், விழி ப்புள்ளவர்களாய், கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையி லும் பலப்படுங்கள்.

ஜெபம்:

அநாதி தீர்மானத்தின்படி அழைத்த தேவனே, என் வாழ்வில் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதை குறித்து எப்போதும் விழிப்பு ள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 11:24-26