புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2020)

“காவல்”

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


மாலை நேரங்களிலே, வீட்டின் பின்பக்கமாக இருக்கும் வளவில் பிள் ளைகள் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, வளவிற்கு அப்புறமாக இருந்த பத்தைக்குள்ளிருந்த சிறிய வனவிலங்கு பிள்ளைக ளில் ஒருவனை கடித்துவிட்டதால், அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு பெற்றோர் கூட்டிச் சென்றார்கள். பிள்ளைக்கு எந்த உயிரா பத்தும் இல்லாமல் வீடு திரும்பினார்கள். காலத்தை தாமதிக்காமல் தகப்பனார், பரந்த பின் வளவின் எல்லையை சுற்றி பாதுகாப்பான கம்பி வேலியை தீவிரமாக அடைத்து முடித்தார். பாதுகாப்பான வேலியை அடைக்காமல், “இது என்வளவு. பிள்ளைகள் விளையாடு வது அவர்களின் உரிமை, ஆகவே ஒரு மிருகமும் உள்ளே வரமுடியாது, ஆகையால் பிள்ளைகளே, நீங்கள் விளையா டுங்கள் நான் பார்த்துக் கொள்வேன்” என்று தகப்பனானவர் கூறுவது மதியீனம். அதனால், சமயம் வாய்க்கும் போது அந்த வனவிலங்குகள் அந்த மனிதனையும், பிள்ளைகளையும் பீறிப்போடும். இவ்வண்ணமாகவே, எங்கள் வாழ்விலும் ஆபத்துக்களிலிருந்து எங்களையும் எங்க ளுக்கு அன்பானவர்களையும் காத்துக் கொள்ளும்படி பல நடவடிக்கை களை எடுக்கின்றோம். அதுபோலவே, எங்கள் ஆன்மீக வாழ்க்கையை பரிசு த்தமாக காத்துக் கொள்ளும்படிக்கு எங்கள் இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள் ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்க ளும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத் தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்ப டுத்தும் என்றார். பெலவீனங்களினால் மனிதர்கள் சோர்ந்து போவது ண்டு. ஒரு மனிதன் வெளித்தோற்றத்தில் எவ்வளவு பெலசாலியாக காட்சி அளித்தாலும், தன் இருதயத்தை காவல் பண்ணாது இருக்கும் போது அவன் ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து உணர்வில்லாதவனே அதாவது அவன் தூங்குகின்றவனாய் இருப்பான். அப்போது எதிராளி யான வனாகிய பிசாசானவன் வந்து தீமையான விதைகளை இருதயத் திலே விதைத்துவிடுவான். அவை வளர்ந்து, சமயம் வாய்க்கும் போது அந்த மனிதனுடைய வாழ்வை மேற்கொள்ளும்.

ஜெபம்:

உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் நிலையை வாழ்வின் நிலைமையை நீர் நன்றாய் அறிந்திருக்கின்றீர். உமக்காக காத்திருக்கின்றேன், நீர் என்னை விடுவித்து காத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 7:20-23