புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2020)

கோதுமை மணிபோல் பலன் கொடு

மத்தேயு 13:29

அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட் டும் வளரவிடுங்கள்.


பாட்டா, தேவனுடைய பிள்ளைகள் மத்தியிலே இப்படியான குழப்பங்கள் மிகவும் மனவேதனைக்குரியது. என்னால் நம்பமுடியவில்லை என்று ஒரு வாலிபன் தன் பேரனாரிடம் கூறினான். தம்பி: பிரச்சனை கொடுப்பவர்கள் எல்லோருமே களைகள் அல்லர். தேவ பிள்ளைகள் மத்தியிலே உண்டாகும் பிரிவினைகளை அவரவர் உணர்ந்து, விட்டுக் கொடுத்து, மன்னித்து, ஒப்புவராகி இலக்கை நோக்கி தொடர்வதே எங்கள் நோக்கம். ஆனால் எதிராளியாகிய பிசாசானவனால் நடத்தப்படும் மனிதர்களும் ஆங்காங்கே இருக்கின்றார்கள். பிசா சானவனின் நோக்கமெல்லாம், தேவ பிள்ளைகள், தங்கள் பரலோக இலக்கை மறந்து மாம்சத்திற்கேற்ற கிரியை களை நடப்பிப்பதாகும். ஒரு சமயம் இயேசு தம்முடைய சீஷர்களை நோ க்கி: “பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதை த்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டை யும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான்” என்று கூறினார். எனவே குழப்பங்களை கண்டு ஆச்சரியப்படாமல், பின்னிட்டு திரும்பாமல், நீ அந்த கோதுமை மணியைப் போல பலன் கொடு. பரம இலக்கை மறந்து போவாயானால் பிசாசின் வஞ்சகத்திற்கு உள்ளாவாய். எனவே இலக்கை நோக்கி முன்செல்லு என்றார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, என்னை சூழ குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவைகளினாலே நான் சோர்ந்து பின்னிட்டு போய்விடாதபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:1-5