புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2020)

உறவாலே உண்டாகும் நிந்தை

சங்கீதம் 3:3

ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகி மையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.


தாவீது ராஜாவின் சொந்த குமாரனாகிய அப்சலோம் தாவீதுக்கு எதிராக கட்டுப்பாடு செய்து, ராஜ்யத்தை கைப்பற்றிக் கொண்டான். தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு வனாந்திர வெளிக்கு கடந்து சென்றான். அவனோடு கூட அவனுக்கு ஆதரவான ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் நடக்கையில், சீமேயி என் னும் ஒரு குடியானவன், தாவீதின் மேலும், தாவீதுராஜாவினுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான். சீமேயி தாவீதைத் தூஷித்து: இரத்தப் பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ என் றான். அப்பொழுது தாவீதோடிருந்த வீரன் ஒருவன் தாவீதை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண் டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமே என்றான். தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்த மனுஷன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்றான். இப்படியாக தாவீது ராஜா தன் சொந்த குமாரனாலே, பலரின் நிந்தைக்கும் அவமான த்திற்கும் மன வேதனைக்கும் உள்ளானான். அந்த வேளையிலே தேவனாகிய கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடலாவது: தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த் துகிறவரு மாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். நான் படு த்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங் குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதி னாயிரம் பேருக்கும் நான் பயப்படேன் என்றான். எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மனவேதனையான நேரங்களிலே, மற்றய மனிதர்களுடன் கோபமடையாமல், தாவீதைப் போல எங்களை அழைத்த தேவனையே நாம் நோக்கிப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இரட்சிப்பு கர்த்தருடையது.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உறவுகளால் உண்டாகும் வேதனையான நேரங்களில் நான் உம்மை நோக்கிப் பார்த்து உமது இரட்சிப்புக்காக காத் திருக்கும்படி நீடிய பொறுமையைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:1-6