புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2020)

நம்பிக்கைத் துரோகம்

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.


“நம்பி இருந்தேன் ஆனால் ஏமாற்றமடைந்து போனேன், இதுதான் உலகம் ” என்ற வசனத்தை பலர் கூறுவதை கேட்டிருக்கின்றோம். ஒரு வேளை நாம் எம் வாயினால் அதை வெளியரங்கமாக அறிக்கை செய்யாவிடினும் எம் மனதில் அப்படிப்பட்ட நோவு ஏற்படுவதுண்டு. இப்ப டிப்பட்ட மன வேதனைகள் எங்களுக்கு மிகவும் அருகிலுள்ளவர்க ளாலேயே உண்டாகின்றது. அதாவது, முன் பின் தெரியாத ஒரு அந்நியன் எம் மைக் குறித்து புறங்கூறித்திரிவதைவிட, எமக்கு அநேக வருடங்களாக அறிமுக மானவர்கள் புறங்கூறும் போது அதிக மன வேதனையை உண்டு பண்ணுகி ன்றது. அப்படிப்பட்ட வேதனைகள், நாம் அதிகமாக நேரத்தை செலவிடும் இடங்களில் இருந்தே வருகின்றது. குடு ம்ப அங்கத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக வேலையாட்கள், சக விசுவாசிகள், நெருங்கிப் பழகும் அயலவர்கள் இதில் உள்ளடங்குவா ர்கள். அதிலும், தேவனுடைய நாமத்தை கூறிக் கொண்டு, இத்தகைய செயல்களை செய்யும் போது அது மிகவும் வேதனைக்குரியதும், மனி தர்களின் மனதை சோர்வடையச் செய்கின்றதுமாய் இருக்கின்றது. நிந்த னைகளுக்கும் போராட்டங்களுக்கும் முகம் கொடுப்பது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு முக்கிய பகுதி. வேதத்திலே காணும் பரிசுத்தவான்கள் தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த போராட்டங்களைக் குறித்த சாட் சியை கூறியிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையைப்பற்றி அடுத்த சில தினங்களில் தியானத்திற்கெடுத்துக் கொள்வோம். வேதனையான நேரங்களிலே, எல்லாவற்றிற்கும் மேலான எங்கள் மீட்பராகிய இயேசு வை உங்கள் கண்முன் நிறுத்திக் கொள்ளுங்கள். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவி களால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (எபிரெயர் 12:2-3). சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை தொடர்ந்து செய்யுங்கள். இயேசுவின் சாயல் உங்க ளில் பெருகக்கடவது. இதனால், பரிசாக நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வீர்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, அழுகையின் பாதையிலே நான் நடக்கும் வேளையிலே என்னை பெலப்படுத்தி, இயேசுவைப் போல பொறுமையோடு உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28