புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2020)

தேவனுடைய வார்த்தையின்படி ஆகக்கடவது

லூக்கா 1:38

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.


“நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று இயேசுவின் தாயாகிய மரியாள் தேவனுடைய வார்த்தையில்மேல் அவள்; கொண்ட விசுவாசத்தை வெளிப்படுத்தி னாள். இனி வரவிருக்கும் காரியங்கள் எப்படியாக தன் வாழ்வில் நடை பெறப் போகின்றது என்பதை அறியா திருந்தும், தேவனால் எல்லாம் கூடும் என்பதை மனதார விசுவாசித்தாள். கர் த்தராகிய இயேசு தாமே, தேவனு டைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்ப ட்டும் இருந்தார், ஆனாலும் தம்மு டைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டு போக ப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரி க்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தம் நிறைவேறும்படிக்கு அவர் தம்மை அடிமையாக ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் சீஷனாகிய பேதுரு இயேசுவை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு பிரதியுத்த ரமாக: என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோ தரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையா வது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்து க்கொள்ளுவான்; என்றார். பிதாவாகிய தேவனுடைய அநாதி திட்டம் இந்த பூமியிலே நிறைவேறும்படிக்கு ஒரு பாத்திரமாக உபயோகிக்கப்ப டுவது பெரிதான சிலாக்கியமாக இருக்கின்றது. அது போலவே, எங் கள் அழைப்பின் பாதையிலும், நாம் தீமையை வெறுத்து நன்மை செய் யும் போது, உபத்திரவங்களையும், நெருக்கங்களையும்;, பழிச் சொற்க ளையும், நிந்தைகளையும் அவமானங்களையும் சகிக்க நேரிடலாம். அவை கள் மத்தியிலும், எங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையின்படி எங்களுக்கு ஆகக்கடவது என்று எம் மை நாம்; அர்ப்பணிப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய அநாதி திட்டமானது இந்த பூவுலகிலும், என்னுடைய வாழ்விலும் நிறைவேறும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி வாழ என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 24:15