புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2020)

தேவன் தந்த சுயாதீனம்

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்தி ற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


எகிப்திலே, அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் ஜனங்கள், ஆளோட்டிக ளினால் உண்டான உபத்திரவத்தினால் வேதனையடைந்து, அடிமை த்தனத்திலே தவித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்க ளின் ஏக்கமெல்லாம் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக் கப்பட வேண்டுமென்பதாகும். அந்த அடிமைத்தனத்திலிருந்து பாலும் தேனும் ஓடுகின்ற செழிப்புள்ள கானான் தேசத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்படி தேவனாகிய கர்த்தர் சித்தம் கொண்டார். அதன்படிக்கு, மோசே என்னும் இரட்சகன் வழியாக அவர்களுக்கு விடுதலையைக் கொடு த்து, அவர்களை வனாந்திரத்தின் வழி யாக வழிநடத்தி சென்றார். எகிப் திலே பார்வோன் என்னும் ராஜாவின் பிரமாணத்திற்கு அடிமைகளாக இரு ந்த அவர்கள், எகிப்தின் அருவருப் புக்களுக்கும் பாவ இச்சைகளுக்கும் உட்பட்டிருந்தார்கள். இப்பொழுது அதிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, சர்வ வல்லமையுள்ள தேவனுக்குள் சுயாதீனமுள்ளவர்களாக மாற்ற ப்பட்டார்கள். அந்த மாற்றமானது ஒரு முடிவும், ஆரம்பமுமாக இருந்தது. அதாவது, பாவ அடிமைத்தன வாழ்வின் முடிவும், தேவன் வாக்கு பண் ணின தேசத்திற்கு சென்றடையும்படிக்கு ஒரு ஆரம்பமாகவும் இருந்தது. ஆனால் அவர்களில் அநேகர், தேவன் கொடுத்த சுயாதீனத்தை விரு ம்பினார்கள், ஆனால் எகிப்தின் பாவ அடிமைத்தனத்தின் அருவருப்புக ளையோ விட்டு விட மனமில்லாதவர்களாயிருந்தார்கள். அதனால் தாங் கள் தேவனுக்குள் பெற்ற சுயாதீனத்தை தங்கள் துர்க்குணத்தை நிறை வேற்றும்படிக்கு துணிகரம் கொண்டார்கள். இன்றும் பலருக்கு கிறிஸ் தவன் என்று பெயரை தரிக்க விருப்பம் உண்டு. ஆனால் உலக ஆசை களைவிட்டுவிட விருப்பம் இல்லை. எனவே கிறிஸ்தவன் என்று நாம த்தை தரித்துக் கொண்டு, தங்கள் மாம்ச இச்சைகளை குற்ற உணர் வின்றி நிறைவேற்றும்படிக்கு, தாங்கள் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை பயன்படுத்துகின்றார்கள். “இது என் தனிப்பட்ட வாழ்வு” “இது என் மனித உரிமை, நான் எனக்கு பிடித்தபடி பேசுவேன், உடுத்துவேன், மனத்துக்கேற்றதை பார்ப்பேன்” என்று துணிகரம் கொள்கின்றார்கள். நாமோ அப்படி இராமல் தேவ சித்தத்திற்கு எங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுப்போம். அதன் பலன் பரலோகில் மிகுதியாயிருக்கும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, உம்முடைய திருக் குமாரனுக்குள் நீர் எனக்குத் தந்த சுயாதீனத்தை, உம்முடைய திருச் சித்தத்தை நிறைவேற் றும்படி உபயோகிக்க ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 17:7-8