புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2020)

தேவ நீதிக்கு அடிமைகளாயிருக்கின்றோம்

எபேசியர் 2:10

ஏனெனில், நற்கிரியைக ளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவ னுடைய செய்கையாயி ருக்கிறோம்;


அடிமை என்ற பதத்தை பலரும் பலவிதமாக கூறிக் கொள்வார்கள். “அந்த மனிதன் போதைவஸ்துக்கு அடிமையாக வாழ்கின்றான்” “அந்த வாலிபன் மோக இச்சைகளுக்கு அடிமையாக இருக்கின்றான்” இப்படி யான பலவிதமாக துன்மார்க்க வாழ்விலும் மற்றும் மறைந்திருக்கும் பெருமை, பொய், பொறாமை, எரிச்சல், பிரிவினை, வைராக்கியம் போன்றவற்றிற்கும் மனிதர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். இப்ப டிப்பட்டவர்கள் மாம்சத்தின் கிரியை களுக்கு அடிமைகளாயிருக்கின்றார்கள். அதுபோலவே, தேவ ஆவியினால் நட த்தப்படுகின்றவர்கள் நற்கிரியைகளை செய்யும்படி திவ்விய சுபாவத்திற்கு அடிமைகளாக தங்களை ஒப்புக் கொடு த்திருக்கின்றார்கள். ஒரு மனிதன் எத ற்கு கீழ்ப்படியும்படி தன்னை ஒப்புக் கொடுக்கின்றானோ அவன் அதற்கு அடிமையாக இருக்கின்றான். நித்திய மரணத்திற்கேதுவான பாவ வாழ்க்கை க்கு தன்னை ஒப்புக் கொடுக்கின்றவன் அந்த பாவ வாழ்க்கைக்கு கீழ்ப்ப டிகின்ற அடிமையாய் இருக்கின்றான். தேவ நீதியை நிறைவேற்றும்படி தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகின்றவன் தேவனுக்கு அடிமையாக இருக்கின்றான். “பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனு~ர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரம த்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத் தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமை களாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். இப்பொழுது உங்களு க்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனு க்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனு டைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:18-23)

ஜெபம்:

நித்திய வாழ்வு தரும் தேவனே, இந்த பூவுலகிலே வாழும் நாட்களிலே, காலங்களை உணர்ந்து, உம்முடைய வார்த்தையின் வெளிச் சத்தில் வாழும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:11