புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2020)

இருதயத்தை பிரகாசிக்கும் ஒளி

2 கொரிந்தியர் 4:6

இருளிலிருந்து வெளிச்சத் தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணு ம்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசி த்தார்.


தன் சகோதரனின் மதியீனத்தை குறித்து வெகுவாய் குழப்பமடைந்திருந்த இளைஞனுக்கு அவன் தந்தை பின்வரும் புத்திமதியை கூறினார். மகனே: “இரண்டு மனிதர்கள், வயலிலே தங்கள் நாளாந்த வேலையை முடித்துபின், மாலையிலே காட்டுப் பாதை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சூரியன் அஸ்தமித்ததால், ஒற்றையடி பாதை வழியாக நட ந்து சென்றுகொண்டிருந்த அவர்களுக்கு, பாதை தெளிவாக தெரிய வில்லை. அவர்களில் முன்பாக நட ந்து சென்ற கொண்டிருந்த மனிதன் தன் சாக்கு பைக்குள் வைத்திருந்த கைப்பந்த மின் விளக்கை (Torch Light) எடுத்து, அதன் வெளிச்சத்திலே நட ந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் செல்லும் பாதையில் ஒரு பெரிய சர்ப்பம் படுத்திருப்பதைக் கண்டு கொண்டான். அவன் பின்னாக சற்று தொலைவிலே, தட்டுத் தடுமாறியபடி மற்றய மனிதன் போய்க்; கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையிலே, தன் சாக்குபையில் கைப்பந்த மின் விளக்கை வைத்திருந்த, புத்தியுள்ள மனிதன் நீயாக இருந்தால், நீ என்ன செய்வாய்; என்று தந்தையார் கேட்டார். மகனே: கர்த்தராகிய இயேசு தாமே உன் விளக்கை ஏற்றியிருந்தால், நீ ஒளி வீசு. இருளிலே நடப்பவன் உன் வெளிச்சத்திலே பாதையை காணும்படி பிரகாசி. மின்வி ளக்கை வைத்திருந்த அந்த மனிதன், சற்று தரித்து நின்று, தனக்கு பின்னாக வந்த மற்றய மனிதனுக்கு சர்ப்பம் படுத்திருக்கும் இடம் தெரியும் படிக்காய் பாதையிலே வெளிச்சத்தை வீசினான். அதனால் இருவரும் பாதுகாப்பாக அவ்விடத்தை தாண்டி சென்றார்கள். பின்பாக வந்த மனிதன் அடுத்த நாளும் விளக்கை கொண்டுவரவில்லை. அதனால் தன் கையில் மின்விளக்கை ஏந்திச் சென்றவன் வழக்கப்படி பாதையிலே ஒளிவீசிக் கொண்டு செல்வதை நிறுத்திவிடவில்லை. உன்னுடைய மனக் கண்களை கர்த்தர் பிரகாசித்திருக்கின்றார், எனவே நீ நீதியின் பதையில் செல்லு. உனக்கு பின்பாக செல்கின்றவர்களுக்கு நீ உதவக் கூடுமானால் உதவி செய்ய மறந்து விடாதே. மற்றவனுடைய புத்தி தெளியும்படி, உன் புத்தியை தெளிவித்த கர்த்தரை வேண்டிக் கொள்ளு. சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தயவாய் அவனுக்கு அறிவுரை கூறு” என்றார்.

ஜெபம்:

எங்கள் இருதயங்களை பிரகாசிக்கச் செய்த நம் தேவனே, எப்போ தும் சுடர்விடும் தீபங்களாகவும், எந்த சூழ்நிலையிலும் இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படிக்கும் எம்மை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:14