புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2020)

உலக ஆசைகள்

1 தீமோத்தேயு 6:11

நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகு ணத்தையும் அடையும் படி நாடு.


நான் இந்த உலகத்தைவிட்டுச் செல்வதற்கு முன்னதாக சீன நாட்டிலுள்ள பெருஞ்சுவரை எப்படியும் பார்க்க வேண்டும். சிறிய வயதிலிருந்து அது என்னுடைய ஆசை. அதற்குரிய செலவை சந்திப்பதற்காக, நான் பல காரியங்களை ஒறுத்து, பணத்தை சேகரித்து வருகின்றேன் என்று ஒரு மனிதன் கூறினார். இன்னுமொரு மனிதன், வைத்திய கலாநிதி பட் டத்தை எப்படியாகிலும் பெற்றுக் கொ ள்ள வேண்டும் என்று அயராது படித்து, தன் உழைப்பின் பெரும்பகுதியை அதற்காக செலவு செய்து வந்தார். அதே போல் இடாம்பீகரமான வீட்டை வாங்க வேண்டும், பிரசித்தி பெற்ற வாகனத்திலே சென்று வரவே ண்டும் என்று ஒன்றுக்கு இரண்டு வேலை செய்து, இன்னுமொருவன் பணத்தை சேகரித்து வந்தான். இவர்கள் யாவ ரும் நீதியாக உழைத்து, கடுமையாக பிரயாசப்பட்டு தங்கள் குறிக்கோள் களை அடைந்து கொள்கின்றார்கள். அதைக் குறித்து பல மனிதர்கள் சபை நடுவிலே சாட்சியும் சொல்லிக் கொள்வார்கள். இதற்கொத்த நோக்கங்களும் குறிக்கோள்களும் எங்கள் யாவரின் வாழ்க்கைவட்டத்திலும் இட ம்பெறுவதுண்டு. இவை யாவும் சரி அல்லது பிழை என்பது இன்றைய தியானத்தின் நோக்கமல்ல. இவைகளை அடைய பிரயாசப்படும் போது, நித்திய வாழ்விற்குரிய அழைப்பு எங்கள் வாழ்வில் எத்தனையாவது இடத்திற்கு தள்ளப்பட்டு போகின்றது என்பதைக் குறித்து நாங்கள் சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இவைகளை அடை யும்படிக்கு பணம் தேவை என்று, பணத்தை அடையும்படி அதிகமாக பிரயாசப்படுவதால், எங்களை அறியாமலே பண ஆசை எங்கள் சிந்தை களில் நுழைந்து விடுகின்றது. இதை அறியாமலும், அறிந்தும் அதை ஏற்றுக் கொள்ளாமலும் வாழும் மனிதர்கள் பலர். இப்பிரபஞ்சத்தின் மேலுள்ள ஆசை, அநேகரின் பிரகாசமுள்ள மனக் கண்களை குருடாக்கி விடுதவதால், காலப்போக்கில் நீதியையும் தேவ பக்தியையும் விசுவா சத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் குறித்த வாஞ்சையையும் விட்டு வழுவிப்போய்விடுகின்றார்கள். எனவே எப்படிப் பட்ட பூவுல நோக்கிற்காகவும், தேவனுடைய மேன்மையான அழைப் பை, நாம் மறந்து போகாமல் விழிப்புள்ளவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இந்த உலகத்தில் நன்மையாக தோன்றுகின்ற காரியங்களை பின்பற்றி, நித்திய ஜீவனுக்கென்று நீர் அழைத்த அழைப்பை குறித்த உணர்வை இழந்து விடாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15