புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2020)

நித்திய அழிவிற்கு விலகியிருங்கள்

மத்தேயு 10:28

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


இதைவிட்டால் வேறு என்ன வேலை எனக்கு தெரியும்? எனவே எப்ப டியாவது எனக்கு கிடைத்திருக்கும் இந்த வேலையை நான் பாதுகா த்துக் கொள்ள வேண்டும் என ஒரு மனிதன் போதகரிடத்தில் கூறினான். கிடைத்த வேலையை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்கின்ற உனது எண்ணம் நல்லது. ஆனால் விசுவாசத்தைவிட்டு வழு விப்போய்விடா தபடிக்கு உன் ஆத்துமாவை காத்துக் கொள்ளு மகனே என்று போதகர் பதில் கூறினார். இந்த உலகத்திலே எங்களுக்கு அதிகாரிகள் இருக்கின்றா ர்கள். இருக்குமிடங்களைப் பொறுத்து அதற்கு உரிமையாளர்களாக, இயக்குனர்களாக அல்லது முகாமையாளர்கள் என பலவிதமாக அழைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு கனத்துடன் கீழ்ப்படிந்து எங்கள் நற்பண்புகளை அவர்களுக்கு வெளிக் காட்டுவது அவசியமானது. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் பரலோக எஜமானன் இருக்கின்றார். அவருடைய திவ்விய வார்த்தைகளும், இந்த உல கத்தில் எங்களுக்குள்ள எஜமானனின் வார்த்தைகளும் முரண்படும் போது, நாங்கள் எப்போதும் எங்கள் எஜமானனாகிய இயேசு ராஜாவின் வார்தையையே பின்பற்ற வேண்டும். இந்த உலகத்திலே எங்கள் தேவை களை சந்திப்பதற்கு எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரு வழியாக இருக்கலாம் ஆனால் பூமியும் அதன் நிறைவும் அதன் குடிகளும் எங்கள் பரலோக எஜமானனுக்கு கீழ்பட்டிருக்கின்றது. ஒரு வழி அடைக்கப் படும் போது அவர் புது வழியை திறக்கின்ற தேவனாயிருக்கின்றார். தொழிற்சாலையின் உரிமையாளர் அல்லது இயக்குனர் அல்லது முகாமையாளர் கூறும் வார்த்தைகள் இன்று பலருக்கு பொன்மொழிகளாக இருக்கின்றது. அதாவது, அவர் கள் கூறும் எதையும் செய்ய ஆயத்தம். ஞாயிறு வேலை செய்ய வேண் டுமா? இரவு சாமம்வரைக்கும் விழித்திருக்க வேண்டுமா? அதிகாலை யில் இருட்டோடே எழுந்து வேலை செய்ய வேண்டுமா? ஆம் நாங்கள் ஆயத்தம். ஆனால், ஞாயிறு காலையில் குறித்த நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்னதாக வரும்படி போதகர் கேட்டுக் கொண்டால் அதை அற்ப மாக எண்ணுகின்றார்கள். இந்த உலகத்தில் எங்கள் தேவை என்ன என்று பரம பிதா அறிந்திருக்கின்றார். மனிதன் பிரயாசப்படுவது அவசியம், ஆனால் சரீரத்தை போஷிப்பதற்காக, ஆத்துமாவை கெடுத்துக் கொள்ளும்படிக்கு இந்த உலகத்தின் போக்குகளினால் வஞ்சிக்கப்படாதபடிக்கு, மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

நித்தியத்திற்கென்று அழைத்த தேவனே, இந்த உலகத்தின் போக்குகளின் வலைகளில் சிக்கி, நித்திய வாழ்வின் அழைப்பை அற்பமாக எண்ணாதபடிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து நடுத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8