புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2020)

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;.


ஒரு கிராமத்திலே இயங்கி வந்த எளிமையான பாடசாலையொன்று, அக்கிராமத்திலே வாழ்ந்து வந்த குடிமக்களின் பிள்ளைகளுக்கு, பல வருடங்களாக, தங்களால் முடிந்த கல்வி சார்ந்த சேவைகளை நேர் த்தியாக செய்து வந்தார்கள். அந்த கிராமத்தின் குடியானவர்கள், பாட சாலை கட்டணமாக ஒரு சிறு தொகையை வருடாந்தம் செலுத்தி வந்தார்கள். அத்துடன், அவ்வப்போது தங்களால் முடிந்த பண உதவி களையும் செய்து வந்தார்கள். அந்த கிராமததிற்கு புதிதாக வந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் வசதியுள்ளவர்களாய் இருந்தார்கள். தாராள மனதுடன் அந்த கிராமத்தின் பாடசாலைக்கு உதவி செய்து வந்தார்கள். அதனால் அந்த பாடசாலையின் நிர்வாகம், மாணவர்க ளுக்கு நன்மை பகர்க்கும் பெரும் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்திரு ந்தார்கள். சில வருடங்கள் கடந்து சென்ற பின்பு, புதிதாக வந்த அந்தக் குடும்பத்தினருக்கும் அந்த பாடசாலையின் நிர்வாகத்திற்குமிடையில் அடிப்படைக் கொள்கையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவிட்டது. எனி னும் பாடசாலையினால் நடத்தப்பட்டு வரும் பெரும் செயற் திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு அந்த குடும்பத்தினரின் பண உதவியானது இன்றியமையாததாக இருந்ததால், அந்த சூழ்நிலைக்கு தீர்க்கான முடிவு எடுக்க முடியாமல், அதை சமாளிக்க வேண்டிய நிலைக்கு பாடசாலை நிர்வாகத்தினர் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இப்பொழுது யார், அல்லது எது, அந்த பாடசாலையின் கொள்கைகளை நிர்ணயிக்கின்றதென்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்விலோ அல்லது ஒரு சபை ஐக்கியத்திலோ முதலாவதாக நாங்கள் முன்னெடுத்துச் செல் லும் செயற்திட்டங்கள் அல்ல, பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அது மாம்ச சிந்தைக்கேற்றபடியல்ல, தேவ ஆவியின் வழிநடத்துதலினாலே நிறைவேற்றப்பட வேண்டும். விசுவாச த்தில் நிலைத்திருந்ததால்: சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுக ளையும் காவலையும் அநுபவித்தார்கள்;, கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்ட ப்பட்டு மரித்தார்கள், குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;. மாறாக, எங்கள் வாழ்க்கையானது மனிதர்களாலோ, உலக பொருட்களினாலோ நிர்ணயிக்கப்டுவதில்லை. தேவனுடைய வார் த்தையினால் நிர்ணயிக்கப்படுகின்றது. நஷ்டம் ஏற்பட்டாலும், நாங்கள் ஒருபோதும் எங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிக் போய்விடக்கூடாது.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, என்னிடத்திலுள்ளவைகள் என்னை போஷிக்கும் என்ற எண்ணத்துடன் வாழாமல், உம்மை நம்பி, ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:24