புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2020)

என் தேவ பெலன்

1 கொரிந்தியர் 1:18

சிலுவையைப்பற்றிய உப தேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது


ஐயா பெரியவரே, உங்கள் வாழ்க்கையின் முறைமையைப் பார்த்து அதன் பிரகாரமாகவே நான் வாழ்ந்து வருகின்றேன். என் குடும்பமும் உங்கள் குடும்பத்தைப் போல ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றது. என் பிள்ளைகளைப் பாருங்கள், உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைப் போல தேவ பக்தியுள்ளவர்களும், கீழ்ப்படிவுள்ளவர்களுமாகயிருக்கின் றார்கள். இந்த அயலிலுள்ள பிள்ளைகளைப் பாருங்கள், அந்த விசுவா சியின் பிள்ளையை பாருங்கள் தலை தெறிக்க திரிகின்றார்கள் என்று ஒரு மனிதன் கூறினான். வயதான பெரிய வர் அந்த மனிதனை நோக்கி: தம்பி, நீ சொன்னவைகள் உண்மை ஆனால் நீர் அறியாத உண்மையொன்றை நான் உனக்குச் சொல்லப் போகின்றேன் கவ னமாக கேள் என்றார். பல தசாப்தங் களுக்கு முன்னதாக ஒருவரும் கிட்டே நெருங்க முடியாத, விபரித்துக் கூற முடியாத அசுத்தமான செயல்களை செய் பவனாகவும்ம், ஓயாமல் அநியாயத்தை விதைக்கின்ற வாலிபனாகவும் நான் தலைதெறிக்க திரிந்தேன். ஆம், அதுவே என் முன்னைய வாழ்க் கையின் உண்மை. தகுதியில்லாத இந்தப் பாவியை கருணைக் கடலா கிய இயேசு ஒரு நாள் சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு அருகதையற்ற நான் தேவ கிருபையினாலே உளையான பாவ சேற்றிலிருந்து மீட்க ப்பட்டேன். இதுதான் என் வாழ்க்கையின் சிலுவையைப் பற்றிய இரக சியம். அதுவே என் பெலன். என்னுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைக ளினால் உண்டான ஆசீர்வாதத்திற்கு நான் காரணமுமல்ல பாத்திரனும் அல்ல. எனவே, ஊரிலே, அயலிலே வாழும் பிள்ளைகளை அற்பமாக எண்ணாதே. நாளை உன்னுடைய சந்ததி நீதியுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், தேவ கிருபையே அதற்கு அவசியமானது என்று கண்ணீ ரோடு அமைதலான குரலிலே பெரியவர் பதில் கூறினார். பிரியமானவர் களே, உங்களுடைய வாழ்விலே சிலுவையைப் பற்றிய இரசியம் என்ன? அதை நன்கு அறிந்தவர்கள் கர்த்தரைப் போல தாழ்மையுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே தேவன் எங்களுக்கு அருளிய சொல்லி முடியா ஆசீர்வாதங்களைக் குறித்து மனமேட்டிமையடையாமல், அவர் முன்னி லையில் எப்போதும் நாங்கள் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண் டும். நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கண்டிருக்கும் நன்மைகளை ஊரிலும் அயலிலுமுள்ளவர்களும் காணவேண்டும் என்று ஊக்கமாக தேவனை வேண்டிக் கொள்ளுவோம்.

ஜெபம்:

என் பெலனாகிய தேவனே, நீர் எனக்கு தந்திருக்கும் விலை மதிக்கமுடியாத இரட்சிப்பைக் குறித்து மாம்சத்திற்கேற்றபடி பெருமை பாராட்டாமல், நன்றியறிதலுள்ளவனா(ளா)க இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 46:1-3