புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2020)

ஒரு போதும் இடறிப் போவதில்லை

பிரசங்கி 12:13

காரியத்தின் கடைத்தொ கையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனு ஷர்மேலும் விழுந்த கட மை இதுவே.


நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? உங்கள் இக்கட்டான சூழ் நிலைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் வேண்டுமா? பொருளாதார எழுச்சி வேண்டுமா? இந்த புத்தகத்தை வாசியுங்கள் என்று வெற்றி வாழ்க்கைக்கு: தன் சொந்த யுக்திகளையும்;, உலக ஞானம் கூறும் வாழ் க்கையின் வழிமுறைகளையும், தத்துவங்களையும் உள்ளடக்கிய தன் வாழ்க்கையின் சுயசரிதையை ஒரு மனிதன் புத்தமாக்கி வெளியிட்டான். சாலொமோன் என்னும் ராஜாவிற்கு, தேவன்தாமே மனிதர்கள் கண்டதிச யிக்கும் ஞானத்தையும் மிகையாக ஐசுவரியத்தையும் கொடுத்திருந்தார். திரண்ட ஆஸ்திகள் உள்ள சாலொ மோன் ராஜா, நிம்மதியை அடையும் படி, வீடுகளைக் கட்டி, திராட்சத் தோ ட்டங்களை நாட்டி, தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை கட் டி, அநேக வேலைக்காரரையும் வே லைக்காரிகளையும் சம்பாதித்திருந் தார். மேலும், வெள்ளி, பொன், ராஜ சம்பத்து, மாகாணங்களிலுள்ள பொரு ட்கள், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்கள், சங்கீதக்காரர், சங்கீதக்காரிகள் அவருக்கு இருந்தா ர்கள். கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றும் தவறாமல் அனுபவிக்கும்ப டிக்கு அதிகாரமும், ஞானமுமுள்ள திரவிய சம்பன்னனுமாயிருந்தார். மது பானத்தால் தன் தேகத்தை சீராட்டிக்கொண்டிருக்க வகை தேடினார். அவை யாவற்றின் முடிவு என்ன? “என் கைகள் செய்த சகல வேலை களையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த் தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.” என்று கூறினார். மனிதர்கள் பிரயாசப்படுவது நல்லது ஆனால் கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த்தர் நகரத்தைக் காவா ராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. அதாவது, உலக ஞானத் தினால் உண்டாகும் மனிதனுடைய பிரயாசம் விருதா. அதனால் அவன் மனம் திருப்தியடைவதில்லை. அவை மாம்சத்திற்கேற்ற பிரயாசம். கர்த் தருக்கு பயந்து அவர் வழிகளிலே நடக்கின்றவன் தேவ ஆவிக்கேற் றபடி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளுவதால் அவன் ஒரு போதும் இடறிப் போவதில்லை.

ஜெபம்:

பரலோக தேவனே, பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, உம்முடைய ஆவியினாலே எல்லாம் ஆகும் என்ற சத்தியத்தை உணர்ந்தவளாக வாழும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சகரியா 4:6