புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2020)

உலகத்தினால் உண்டான மேன்மை

யோவான் 3:6

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.


மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுதல் மனிதனுடைய அறியாமையாமையும், மதீயினமும் பெலவீனமுமாயிருக்கின்றது என்று பரிசுத்த வேதாகமம் சுட்டிக் காண்பிக்கின்றது. மாம்சத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டுதல் என்றால் என்ன? பிறப்பினாலோ அல்லது வளர் ப்பினாலோ அல்லது எங்கள் பிரயாசத்தினாலோ இந்த உலகத்தினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட மேன்மை களை குறித்து மனிதனுடைய மனதில் ஒட்டிக் கொள்ளும் பெருமையே மாம் சத்திற்கேற்ற மேன்மைபாராட்டுதல். இதனால் வரும் பலன் அற்பமே. எடுத் துக்காட்டாக, உலக ஆஸ்தி, கல்வி மற்றும் உலக அந்தஸ்து. நான் இன்ன கோத்திரத்தை சேர்ந்தவன், இன்னா ருடைய பேரன் என்று கூறுவதனால் வரும் ஆதாயம் அழிவுக்குரியது. இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே, அவருடைய திருப்பணிக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் முன்குறிக்கப்பட்டிருந்தார். இந்த யோவான் இயேசுவின் தாயாருக்கு இனத்தவன். அதனால் அவன் மேன்மையானவனாக எண் ணப்படவில்லை. பிதாவின் சித்தத்தை செய்யும்படி தன்னை அர்ப்பணி த்து, மரணம்வரை அதை நிறைவேற்றி முடித்ததால் மேன்மையடைந் தான். அந்நாட்களிலே, ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு இனத்தவர்களும், இயேசுவின் பூவுலக தந்தை யாகிய யோசசேப்புக்கும் உறவினர்கள் பலர் இருந்திருப்பார்கள். அவ ர்கள் தாங்கள் இயேசுக்கு இனத்தவர்கள் என்று கூறிக் கொள்ளுவதால்; நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியாது. ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவே சிக் கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன் என்று இயேசு கூறியிருக்கின்றார். இது மனிதனுடைய சித்த த் தினால் உண்டானதில்லை, இது பிதாவாகிய தேவனுடைய சித்தத்தி னால், மீட்பராகிய இயேசு வழியாக உண்டாயிற்று. இயேசுதாமே சிலுவையின் வழியாக மரணத்தை ஜெயம் கொண்டார். அவரை விசு வாசிக்கிறவனெவனோ, அவன் ஆத்துமா அழிவைக் காண்பதில்லை. அவனை அவர் மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலி னாலும் இரட்சிக்கின்றார். எனவே மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபார hட்டுதலை விட்டுவிட்டு, பிதாவாகிய தேவனுடைய சித்தம் எங்களில் நிறைவேறும்படிக்கு கிறிஸ்துவுக்குள் பிரயாசப்படுவோம்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, இந்த பூவுலகின் மேன்மைகளை குறித்து பெருமைபாராட்டாமல், கிறிஸ்துவுக்குள் உம்முடைய சித்தம் என்னில் நிறைவேறும்படி உம்முடைய ஆவியினால் நடத்திச் செல்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 2:15