புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2020)

பரிசுத்தவான்களுடைய சுதந்திரம்

கொலோசெயர் 1:13

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,


பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்: நான் இயேசுவை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவ ர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்து க்கொண்டிருந்தான். சமயம் வாய்த்த போது, தம்முடைய ராஜ்யத்தின் பங் காளியாக தன்னை அழைத்த கர்த்த ராகிய இயேசுவை காட்டிக் கொடு த்தான். இயேசு மரணாக்கினைக்குள் ளாகத் தீர்க்கப்பட்டபோது, குற்றமில் லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடு த்ததினால் பாவஞ்செய்தேன் என்று தன் உயிரை தானே முடித்துக் கொண் டான். மற்றய 11 அப்போஸ்தலரைப் போல மேன்மையான அழைப்பைப் பெற்ற இவனும், இயேசுவோடு கூடவே இருந்து வந்தான். அப்படியானால் இவன் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டான்? சுமார் மூன்றரை வருடங்கள் இயேசுவோடு வாழ்ந்து, அவருடைய நித்திய வாழ்வு தரும் திவ்விய போதனைகளைக் கேட்டி ருந்தான். இயேசு செய்த பெரிதான அதிசயங்களையும் கண்டிருந்தான். பரலோகத்தின் இரகசியங்களை இயேசு தம்மோடிருந்தவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அப்படியிருந்தும் இவன் இயேசுவின் வார்த் தைகளுக்கு மனதார செவி சாய்க்காமல் உணர்வற்ற வாழ்க்கை வாழ் ந்து வந்தான். தன் அழைப்பின் மேன்மையை உணராமல் தன்னைத் தானே இருளின் அதிகாரத்திற்கு ஒப்புக் கொடுத்துவிட்டான். இயேசுவின் வார்த்தைகளை கேட்கும் நாங்கள் யாவரும் உணர்வுள்ள ஜீவியத்தை காத்துகொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை கேட்டும் அதன் படி வாழாதபடிக்கு தங்கள் இருதயத்தை கடினப்படுத்துகின்றவர்கள், இருளின் பாதையை தங்களுக்கென தெரிந்து கொள்கின்றார்கள். அந் தப் பாதை மனிதர்களை நித்திய மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம் மைத் தகுதிப்படுத்தியிருக்கின்ற தேன்தாமே, இருளின் அதிகாரத்தி னின்று நம்மை விடுதலையாக்கியிருக்கின்றார். அந்த அழைப்பின் மேன் மையை உணர்ந்து கொண்டவர்களாகிய நாம், அந்த அழைப்பிற்கு பாத் திரராக வாழும் நோக்கமுடையவர்களாக வேத வார்த்தைகளை கருத்து தோடு கற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

உமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு எங்களை உட்படுத்தின தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9