புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 01, 2020)

வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


இந்த வருடம் ஆரம்பித்து ஆறு மாதங்களை தேவ கிருபையால் கடந்து வந்திருக்கின்றோம். வாக்குரைத்த தேவன் எங்கள் வாழ்க்கையில் உண்மையுள்ளவராகவே இருக்கின்றார். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய், சத்திய ஆவியானவரின் வழிநடத்துதலினால், பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானம் எங்களில் நிறைவேற வேண்டும் என்பதே அவருடைய பூரண சித்தம். அந்த திவ்விய சித்தத் திலிருந்து எங்கள் எண்ணங்களை திசை திருப்பும்படியாய், இந்த உலக த்திலே பல சக்திகள் எதிராக செயற் பட்டு வருகின்றன. எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து, செழிப்புள்ள கானா னுக்கு அழைப்பை பெற்ற தேவனு டைய ஜனங்களை தேவ ஊழியராகிய மோசே என்னும் மனிதன் வழிநடத்தி வந்தார். ஜனங்கள் சீனாய் வனா ந்தரத்தில் வந்து சேர்ந்த பின்பு, தேவ பிரமாணங்களையும் ஆராதனை முறைமைகளையும் தம்முடைய ஜனங்களுக்கு சொல்லிக் கொடு க்கும்படி, தேவனாகிய கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது தங்களுக்கென்று தெய்வங்களை (விக்கிரக ங்களை) உருவாக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். தங்களை அழை த்த ஒரே மெய் தேவனாகிய கர்த்தரின் அதிசய செயல்களை கண்டவ ர்கள், நன்மைகளை அனுபவித்தவர்கள் ஆனாலும் சில நாட்கள் பொறு த்திருக்கக்கூடாமல் தங்களுக்கென்று விக்கிரகங்களை ஏற்படத்திக் கொண்டார்கள். பாவ அடிமைத்தனத்திலிருந்து, பரம கானானாகிய பர -லோகம் சென்றடைவதற்கு அழைப்பை பெற்றிருக்கின்ற நாம், இந்த உலகமாகிய வனாந்திரத்தின் வழியாக கொஞ்சக் காலம் யாத்திரை செய்து கொண்டிருக்கின்றோம். தேவனுடைய அதிசயமான செயல்களை எங்கள் வாழ்வில் கண்டு அனுபவித்திருக்கின்றோம். எனவே, கர்த்த ருடைய நாட்கள் நிறைவேறும் வரைக்கும் நீடிய பொறுமையுள்ளவர் களாக எங்கள் ஜீவ யாத்திரையைத் தொடருவோம். தேவன் எங்களை மறந்தாரோ, கைவிட்டாரோ, எங்கள் ஜெபங்களை கேட்க மாட்டாரோ என்று எம் உள்ளத்தில் தீர்மானம் செய்து, சொந்த வழிகளை தெரிந்து கொள்ளாமல் கர்த்தருக்கு காத்திருப்போம் அவரால் எங்கள் நடைகள் ஸ்திரப்படும். நாங்கள் தாபரிக்கும் ஊருக்கு (பரலோகத்திற்கு) சென்ற டையும்வரை அவர் எங்களை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

நித்திய வாழ்வடையும்படி அழைத்த தேவனே, வாழ்க்கையில் ஏற்படும் எதிரடையான சூழ்நிலைகளைக் கண்டு என் கண்போன வழியில் சென்று விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகாதபடிக்கு என்னை வழிநடத் திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:3-4