புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2020)

நல்ல தகப்பன்

எபிரெயர் 12:7

நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?


தன் நண்பர்களோடு விளையாடச் சென்ற சிறு பையன் காஞ்சொறி செடிகள் இருக்கும் இடத்திற்கு சென்றதால், அவன் கை கால்கள்; தடித்து வீக்கமுற்றது. அதை அறிந்து கொண்ட பெற்றோர், அவனை ஆறுதல்ப்படுத்தி அதற்குரிய கை மருந்தைக் கொடுத்து, நண்பர்களோடு விளையாடும் போது அவதானமாக இருக்கும்படி கூறினார்கள். சில நாட் களுக்கு பின்பு மறுபடியும் நண்பர்க ளோடு விளையாடச் சென்ற அந்த சிறு பையன், சேற்றுக்குள் விழுந்ததால், அவன் அணிந்திருந்த உடையிலே, அழு க்குகளோடும், நாற்றத்தோடும் வீடு திரு ம்பினான். இப்படியாக ஒன்றில்லா விட் டால் இன்னொன்று என்ற பிரகாரமாக, நண்பர்களோடு விளையாடச் சென்றால் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். சில கிழமைகளாக அவ னுக்கு எச்சரிப்பை வழங்கிய பெற் றோர், தகாத நண்பர்களின் கூட்டுறவே அடிப்படைக் காரணி என்பதை அறிந்து கொண்டதும், பெற்றோர், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பிரியமானவர்களே, மனிதர்க ளுடைய வாழ்க்கையிலே தவறு ஏற்படுவது சகஜம் என்று பலரும் கூறிக் கொள்வதை கேட்டிருக்கின்றோம். அது உண்மை. ஆனால், ஒன்றன்பின் ஒன்றாக தவறுகள் ஒரே அடிப்படைக் காரணியினால் ஏற்படுமாயின், அதற்குரிய தகுந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். “தவறுதலாக, ஊர் துழவாரங்களை பேசும் அந்தக் குழுவோடு சேர்ந்து, வீண் வார்த்தைகளை நினைக்காமல் பேசிவிட்டேன் என்று ஒரு பெண்மணி மனம் வருந்தினாள்” மனம்வருந்துதல் நல்லது. ஆனால் அத்தோடு நின்றுவிட முடியாது. அந்தக் குழுவைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த சிறு பையன் பெற்றோரின் எச்சரிப்பை குறித்து கவனமெடுக்காததால், அவர்கள் அவனை சிட்சிக்க (நல்வழிப்படுத்தும்படி கண்டித்து தண்டித்தல்) வேண் டியதாயிற்று. அதுபோலவே, அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்ற எங்களை, பரம பிதா, நேசிக்கின்றார். எனவே நல்ல தகப்பனைப் போல எங்களை சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். தகப்பன் பிள்ளைகளு க்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திம தியை மறந்து போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்முடைய பிள்ளை யாகிய நானும் உம்மைப் போல இரக்கத்திலே செல்வந்தனாக இருப்ப தன் மேன்மையை உணரும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 1:8