புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2020)

உன்னதமானவரின் பிள்ளைகள்

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக் கிறவர்களோ புதுப்பெல னடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந் தாலும் சோர்ந்துபோகார் கள்.


வாழ்;க்கையிலே களைத்து இளைத்துப் போகும் நேரங்கள் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதுண்டு. சிலர், தங்கள் வாழ்க் கையின் நாளாந்த பழுவினால் சலிப்படைந்து, வாழ்க்கையிலே ஒரு மாற்றம் வரவேண்டும் என்று காத்திருக்கின்றார்கள். வேறு சிலர், நன்மை செய்து, பாடனுபவிப்பதால், களைத்துப் போயிருக்கின்றார்கள். இன்னும் சிலர், பாவ அடிமைத்தன த்திலிருந்து வெளிவரமுடியாமல், யாருக்கு இதை சொல்வது என்ற ஏக் கத்துடன் தவித்துக் கொண்டிருக்கின் றார்கள். எங்களுக்கு இருக்கும் சரீர பெலத்தினாலோ, இந்த உலக ஞானத் தினாலோ நமது பெலவீனத்தை மேற் கொள்ள முடியாது. பாவ மன்னிப்பை விலை கொடுத்து பெற்றுக் கொள்ளக் கூடுமோ? யாராக இருந்தாலும், தேவனு டைய அனுக்கிரகத்தை பெற்றாலொ ழிய இந்த உலகத்தை வெற்றி கொள்ள முடியாது. தம்மிடம் வந்தோரை புற ம்பே தள்ளாத இயேசு இவை யாவற்றி லிமிருந்து விடுதலை கொடுக்கின்றவராயிருக்கின்றார். தேவனால் பிற ப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலக த்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானர் தேவனுடைய குமாரன் என்று இருதயத்திலே விசுவாசித்து, அவன் தன் வாயினாலே அறிக்கையிட்டு, இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை தன் கிரியையிலே காண்பிக்கி ன்றவன் இந்த உலகத்தை ஜெயிக்கின்றான். நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையை பெய்யப் பண்ணி, சூரியனை உதிக்கச் செய்கின்ற தேவன், தம்முடைய கிருபையை மனிதர்கள் யாவர்மேலும் பொழிகின் றார். ஆனால் யாவரும் அவரையும் அவருடைய அனுக்கிரகங்களையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. அவரை ஏற்றுக் கொள்ளுகின்றவர்கள் யாவ ருக்கும் அப்பா பிதாவே என்று அவரை கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை கொடுக்கின்றார். அந்த தேவ ஆவியை பெற்றவர்கள், உங்கள் பெலவீன நேரத்திலே சோர்ந்து பின்னடைந்து போய்விடாதிருங்கள். ஒரு வேளை பாவம் செய்திருந்தாலும், அது வளர்ந்து பெருக இடங்கொடுக் காமல், இயேசு வழியாக உங்கள் அப்பா பிதாவிடம் வந்து சேருங்கள். அவர் பாவங்களை மன்னித்து, சோர்ந்து போனவர்களை திடப்படுத்தி, இளைத்துப் போன உள்ளங்களில் எழுப்புதலை உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

அப்பா பிதாவே என்று உம்மை அழைக்க அதிகாரம் தந்த தேவனே, உம்முடைய பிள்ளையாகிய நான், மற்றவர்களுடைய தப்பித ங்களை மன்னித்து மறந்து விடும்படி நல்ல இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9