புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2020)

இதயபூர்வமான நற்கிரியைகள்

சங்கீதம் 51:17

தேவனுக்கேற்கும் பலி கள் நொறுங்குண்ட ஆவி தான்; தேவனே, நொறுங் குண்டதும் நருங்குண்ட துமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்த ரைக் கனம்பண்ணு என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எப்படியாக நாங்கள் கர்;த்தரை கனம் பண்ண முடியும்? ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதி 19:17). திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத் திலே அவர்களை விசாரிக்கிறதும், உல கத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்த மான பக்தியாயிருக்கிறது. (யாக் 1:17). சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந் தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கி றவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறியிருக்கின்றார் (மத் 10:42) அதன் பிரகாரமாக, நாங்கள் ஏழை, எளியவர்களுக்கும், திக்கற்ற பிள்ளைகள், விதவைகளுக்கும், தேவ ஊழியத்தை நடப்பிக்கின்றவர்க ளுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றோம். இவைகளை செய்கின்ற வர்கள், வேதம் கூறும் கருப்பொருளை உணர்ந்தவர்களாக தொடர்ந்தும் உற்சாகத்தோடு அவைகளை செய்ய வேண்டும். தேவனுடைய ராஜ்யம் பொருட்களையும் பண்டங்களையும் குறித்ததல்ல, அது எங்களை குறி த்தது, எங்கள் உள்ளான மனிதனை குறித்தது. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக் கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலை களிலுள்ள பறவைகளையெல்லாம் நான் அறிவேன்; வெளியில் நடமாடுகிற வைகளெல்லாம் என்னுடையவைகள் என்று தேவன் கூறியிருக் கின்றார். பொருளிலும் பணத்திலும் தேவன் பிரியப்படுகின்றவர் அல்லர். அவர் உங்களிலும் என்னிலும் பிரியப்படுகின்றவர். எங்கள் இருதயத்தை அவர் சமுகத்திலே கொடுக்கும் போது, அங்கே இருந்து புறப்படுகின்ற, ஸ்தோத்திர பலிகள், காணிக்கைகள், அன்னதானங்கள், பொருளுதவி கள், சரீர உதவிகள் யாவும் தேவனுக்கு சுகந்த வாசைனயான பலியாக இருக்கும். எங்களது இதயபூர்வமான நற்கிரியைகளின்மேல் தேவன் எப்போதும் பிரியமாயிருக்கின்றார்.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, எதை நான் உமக்கு தருவேன்? உமக்கு உகந்த ஜீவனுள்ள திருப்பலியாக என் உள்ளத்தை உமக்கு தரு கின்றேன், ஆகாத எண்ணங்களை என்னைவிட்டு அகற்றியருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:45