புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2020)

தேவனுக்கு உகந்த ஆராதனை

மல்கியா 1:6

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமா னா னால் எனக்குப் பயப்ப டும் பயம் எங்கே?


பல மாதங்களாக என் மகனை சந்திக்க முடியவில்லை. தொலை பேசியில் பேசுவதற்கும் அவனுக்கு நேரமில்லாமல், தன்னுடைய வியா பார அலுவல்களில் கடுமையாக வேலை செய்து வருகின்றான். எப்ப டியும் தந்தையார் தினமன்று என்னைச் சந்திக்க வருவான் என்று திட நம்பிக்கையோடு, வயது சென்ற தந்தையார் தன் நண்பருக்கு கூறி னார். தந்தையார் தினமன்று, பலரும் பார்த்து வியகத்தக்க பரிசுப் பொரு ட்கள் பிரபல்யமான இன்ரநெற் ஸ்தா பனமொன்றின் (on-line) வழியாக அனு ப்பி வைக்கப்பட்டது. மாலை நேரத் திலே தந்தையாரை வாழ்த்தும்படிக்கு, அவர் தங்கியிருந்த மட்டுப்படுத்தப் பட்ட உறுப்பினர்கள் தங்கும் சிறப்பு முதியோர் இல்லத்தில், நரம்பு வாத்தி யங்களின் (String instruments) இசை குழு வந்து பாடல்களை பாடி சிறப்பித்தார்கள். தொடர்ந்து அங்கி ருந்தவர்களுக்கு இன்சுவையுள்ள விருந்து பரிமாறப்பட்டது. ஆனால் தன் தந்தையை சந்திக்க மகனுக்கு முடியாமற் போயிற்று என்று தொலைபேசி வழியாக தந்தையார் அறிந்து கொண்டார். மற்றவர்கள் முன்னிலையில் தன் மகனை குறித்து எதையும் கூற விரும்பவில்லை ஆனால் படுக்கையிலிருந்து, இந்த மாலையிலே உலகிற்கு நல்ல நாட கம் போட்டான், ஆனால் தன் தந்தையை சந்திக்க அவனுக்கு நேர மில்லை என்று தன் மகனின் மனநிலையைக் குறித்து வேதனைப்ப ட்டார். தன் தந்தையால் ஏற்றுக் கொள்ளவே முடியாத கொண்டாட்ட த்தை செய்வதால் வரும் பலன் என்ன? அவனுக்கு சுயதிருப்த்தி உண்டாகும். மற்றவர்கள் மத்தியில்; அங்கீகாரமும் நற்பெயரும் கிடை க்கலாம். பிரியமானவர்களே, தேவனை சேவிப்பது என்பதன் கருப்பொருள் என்ன என்பதையும் தேவனுக்கு கொடுக்கும் ஆராதனையின் கருப்பொருள் என்ன என்பதையும் நாங்கள் மறந்து விடக்கூடாது. நேரங் கிடைத்தால் தேவனை ஆராதிப்பேன் அல்லது என் வெகுமதிகள், அவரை ஆராதிக்கும் என்று வாழ்வது மதியீனம். முதலாவது, தேவ னோடுள்ள உறவு, அவருடைய ராஜ்யம், அவருடைய நீதி அதன் பின்பு இந்த உலகிலே எங்களுக்கு அவசியமானவைகள் யாவும் இருக்க வேண்டும். தேவனோடு எப்படி உறவாடுகின்றோம், அவருடைய வார் த்தைகளை வாசித்து, கேட்டு, தியானிப்பதினால் அல்லவோ. அவரோடு எப்படி பேசுகின்றோம்? ஜெபத்தின் வழியாக அல்லவோ. எனவே தேவ பிள்ளைக்குரிய அடிப்படைச் சத்தியத்தை மறந்து போய்விடாதிருங்கள்....

ஜெபம்:

பரலோகத்தின் பிதாவே, உம்முடைய பலனைப் பெற்றுக் கொள் ளும்படி, நாள்தோறும் உம்மை நாடித் தேடி, உமது சமுகத்தில் உமக்கு பிரியமான ஆராதனை செய்யும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத் தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 4:24