புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2020)

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு

சங்கீதம் 103:17

கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள் ளது.


ஒரு தாயாளவள், ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக தகரப் பேணியில் அடைக்கப்பட்ட பாற்கட்டியை கொள்வனவு செய்திருந்தாள். பாற்கட் டியை பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக குறிப்பிட்ட பேணியை எடுத் தபோது, அதன் பாவனைக்கு உகந்த திகதி முடிவடிந்திருந்ததைக் கண்டு கொண்டாள். இந்த பூமியிலே எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்ப மும் முடிவும் உண்டு. அவை உயிரின ங்களாக இருக்கலாம் அல்லது மற்றய படைப்புக்களாக இருக்கலாம் அவை யாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. பூமி யும் அதிலுள்ள யாவும் முடிவடைவ தற்கும் ஒரு கால எல்லை எங்கள் தேவ னாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக் கின்றது. எனினும், அந்த கால எல் லைக்குள் வாழும் மனிதன், இந்த உல கம் கண்டிருக்கும் வளர்ச்சியைக் குறி த்து பெருமை அடைந்திருக்கிறான். உலக அறிவு, விஞ்ஞானம், தொழில் நுட்ப வளர்ச்சி என்று கூறும் மனிதர் கள், சர்வத்தையும் உருவாக்கிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு மேலாக தங்கள் நிலையை உயர்;த்துகின்றார்கள். தேவனைப்பற்றிய அறிவை அற்பமாக எண்ணுவது டன், தேவன் நியமித்திருக்கும் ஒழுங்குக்கு எதிராக துணிகரமான வார் த்தைகளை பேசுகின்றார்கள். இப்படியாக மனித அறிவு, உலக ஞானம், உலக ஐசுவரியம், அந்தஸ்து என்று பல தகுதிகளையும் தரா தரங்களையும் தங்களுக்குள்ளே ஏற்படுத்தி அந்த போர்வைக்குள் வாழ் கின்றார்கள். வானமும், பூமியும், அதிலுள்ள யாவும் முடிவுக்கு வரும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. “மனு~னுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது.” இந்த உண்மையை உணரா தபடிக்கு இந்த உலக ஞானம் மனிதர்களின் கண்களை குருடாக்கியி ருக்கின்றது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன் படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலும் உள்ளது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி, அதனால் என் மனக் கண்கள் குருடாகிப் போகாதபடிக்கு, உம்முடைய ஞானத்தினால் நிறைந்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:24-25