புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2020)

ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்

1 பேதுரு 4:7

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.


தன்னுடைய ஆண்டுகள் சீக்கிரமாய் கடந்து போகின்றது என அறிந்து கொண்ட தந்தையார், தன் சொத்துக்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார். அந்த நாள் எப்போ வரும் என்று காத்திருந்த அவருடைய குமாரர்களில் ஒருவன், தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தன் குடும்பத்தோடு வேறு பட்டணத்திற்கு சென்று வாழ முடிவெடுத்தான். அவனு டைய போக்கை கண்டு கொண்ட தந் தையாரும், அவனுடைய சகோதரரும் அவனுக்கு புத்திமதி கூறினார்கள். ஆனால் அவனோ, கேளாதவன் போல தன் மனதை கடினப்படுத்திக் கொண்டு, தன் இஷ்டப்படி சென்றுவிட்டான். ஆண் டுகள் கடந்து சென்று, வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்த போது, அதன் மூல காரணத்தை உணராமல், மாற்று வழி களை கைக்கொண்டு நடந்தான். இவை யெல்லாம் இந்த உலகிலே யாவரு க்கும் நடக்கும் சர்வசாதாரணமான காரி யங்கள் என்று தன் கொள்கைகளை கூறி, தட்டிக் கழித்துவிடுவான். ஏனெனில் தந்தையிடமிருந்து பெற்ற சொத்துக்கள் அவனின் பின்னடைவுகளை சீர்செய்வதற்கு பக்கபலமாக இருந்தது. ஆனால் அவனுடைய வாழ்க்கையிலோ எந்த சீர்திருத்தமும் காணமுடியவில்லை. இப்படிப் பட்ட மனநிலையோடு வாழும் மனிதர்கள் பலர். பிதாவாகிய தேவன் தாமே தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்ப ண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். கிருபையின் நாட்களை கூட்டிக் கொடுக்கின் றார். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரு ம்பவேண்டு மென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். ஆனால் மனிதர்களோ, தந்தையின் சொத்துக்களை பெற்றுக் கொண்ட மகனைப் போல அகந்தையுள்ளவர்களாக வாழ்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் தத்துவங்களை பேசிக் கொள்கின்றார்கள். ஆனால், எவ்வளவு ஆண்டுகள் அப்படியா கப் போக முடியும்? எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாகின்றது. எனவே நீங் கள் மற்றவர்களுடைய வாழ்க்கை முறையை பார்த்து சோர்ந்து போகா தபடிக்கு, தெளிந்த புத்தியுள்ளவர்களாக எப்பொழுதும் ஜெபத்திலே விழித்;திருங்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, உம்முடைய வார்த்தையை அசட்டை செய்து, தங்கள் தத்துவங்களிலே வாழ்பவர்களைப் போல நான் இழுப்புண்டு போகாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:45-48