புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2020)

இயேசுவை எங்கே காணாலாம்?

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


பிள்ளை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே, இளம் தம்ப திகள், பிள்ளைக்கு என்ன பெயர் சூட்டுவதென்றும், ஆண் பிள்ளைக் குரிய சில பெயர்களையும், பெண் பிள்ளைகளுக்குரிய சில பெயர்களை யும் தெரிந்தெடுத்தார்கள். தம் பிள்ளைக்கு அழகாக கிறிஸ்தவ பெயரை சூட வேண்டும். ஆலயத்திலே பிரதி~;டை செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் கற்பிக்க வேண்டும். தவறாமல் ஆலயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தங்கள் பிள் ளை கிறிஸ்துவை சார்ந்த பிள்ளையாக வளர வேண்டும் என்ற ஆசை அத்த ம்பதியினரிடம் இருந்தது. இவைகள் நன் மையான ஆசைகள். ஆனால் இவற் றை செய்வதன் அடிப்படைக் காரண த்தை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும் என்பதே அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே எங்களிலும் இருக்கவேண்டும். அவர் தேவனுடைய ரூபமாயி ருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடு த்து, மனு~ர் சாயலானார். அவர் மனு~ரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஏன் அவர் அப்படியாக தன்னைத் தாழ்த்தினார்? நம்மிடத்திலே அன்புகூர்ந்தபடியால் அவர், நம்மை மீட்கும் பொருட்டு, நமக்காக தம்மைத் தாழ்த்தினார். வாழ்வில் என்ன நடந்தா லும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே தம்முடைய ஆகாரம் என்று கூறினார். நன்மை செய்திருந்தும், மனிதர்கள் அவரைப் பகைத்தார்கள், தூற்றினார்கள் ஆனால் அவரோ அவர்கள் அறியாமைக்காக பிதாவை வேண்டிக் கொண்டார். ஏழை, எளியவர்கள், திக்கற்றவர்களைக் கண்டு மனமிரங்கினார். பாவ சோதனை ஏற்பட்ட போது தேவ வார்த்தையால் அவைகளை ஜெயித்தார்;. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவ னை அடைய வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். இப் படியாக வர்ணித்துக் கூற முடியாத அவருடைய திவ்விய சுபாவங்கள் எண்ண ற்றவைகள். இப்படிப்பட்ட திவ்விய சுபாவங்களே ஒரு கிறிஸ் தவனை அடையாளப்படுத்தும் பண்புகளாகும். இந்தப் பண்புகளை எங்கள் வாழ் க்கையில் மற்றவர்கள் காண வேண்டும். அதாவது, இயேசு கிறிஸ்து வை மற்றவர்கள் எங்களில் கண்டு நற்சாட்சி பகர வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, பெயரளவில் கிறிஸ்தவனாக வாழாமல், கிறிஸ்துவின் திவ்விய சுபாவங்களை மற்றவர்கள் காணும்படிக்கு என்னுடைய வாழ்வு மாறும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:4-8