புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2020)

நான் உன்னோடே இருப்பேன்

யாத்திராகமம் 3:12

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்


தேவனுடைய ஜனங்களை எகிப்தின் அடிமைத்தன வாழ்விலிருந்து செழிப்புள்ள கானான் என்னும் தேசத்திற்கு வழிநடத்துவதற்கு மோசே என்னும் மனிதனை தேவனாகிய கர்த்தர் முன்குறித்திருந்தார். மோசே, இஸ்ரவேலிலே, லேவி என்னும் கோத்திரத்திலே பிறந்தான். அவன் பிற ந்த நாட்களிலே, இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே பிறக்கும் ஆண் குழ ந்தைகள் யாவும் கொல்லப்பட வேண் டும் என்று எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கொடூரமான சட்டத்தினை பிற ப்பித்திருந்தான். மோசேயின் பெற்றோர் பார்வோனுக்குப் பயந்ததால், பிள்ளையை ஒளித்து வைக்கக்கூடாமல், நாண ல் கூடையில் குழந்தையை வைத்து, பார்வோனின் குமாரத்தி ஸ்நானம் பண்ணும் போது, நதியோரமாக அந்தக் கூடையை வைத்தார்கள். பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வள ர்த்தாள். அரண்மனையிலே வளர்க்கப்பட்ட “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.” (அப் 7:22) இந்த உலகத்தின் பார்வையின்படி, இஸ் ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அவர்களை வழிடத்திச் செல்வதற்கு, மோசே தகுதிபெற்றவனாக இருந்தான். தன க்குண்டான பெலத்தினால், தன் ஜனத்திற்கு நீதி செய்ய முற்பட்டான். பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பி யோடி 40 வருடங்கள் மீதியானியரின் தேசத்திலே சஞ்சரித்தான். அவனு க்கு 80 வயதானபோது, கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, என் ஜனங்க ளை மீட்டுக் கொள்ளும்படி உன்னை பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா என்றார். அதற்கு மோசே: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ர வேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று, ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். ஏனெ னில், இந்த உலகத்தினால் உண்டாயிருந்த தகுதியினால் ஒன்றும் செய்ய முடியாது என்று மோசே நன்கு அறிந்திருந்தான். பின்பு தேவன் தன்னோடு இருப்பதே தன் தகுதி என்பதை திட்டமாக அறிந்து கொண் டான். ஆம், பல ஜனங்கள் எங்களோடிருந்தாலும், நாங்கள் கற்று தேர்ந் திருந்தாலும், ராஜ மாளிகையிலே வளர்க்கப்பட்டாலும், தேவன் எங்க ளோடு இல்லை என்றால், எங்களது தகுதிகளினால் வரும் இலாபம் அற்பமானதும், இந்த உலகத்தோடு அழிந்து போகின்றதுமாயிருக்கும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, என் பிறப்பினாலோ, வளர்ப்பினாலோ அல் லது உம்மால் எனக்குண்டான ஆசீர்வாதங்களினாலோ உண்டான தகுதி யிலே நம்பியிராமல் எப்போதும் உம்மையே சார்ந்திருக்கும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 46:1-3