புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2020)

மகிமை தேவனுக்கே

வெளிப்படுத்தல் 1:6

நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


ஒரு ஆசாரிப்பு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது. அதின் முந்தின பாக த்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன. அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே பொன்னாற் செய்த தூபகலசமும், முழுவதும் பசும் பொன் தகட்டால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன. அந்தப் பெட்டியிலே மன்னா வைக்க ப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனு டைய தளிர்த்த கோலும், உடன்படி க்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீ ன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன. இவைகள் இவ்வித மாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசா ரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடா ரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசா ரியன்மாத்திரம் வரு~த்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இர த்தத்தைத் தனக்காகவும் ஜனங்களு டைய தப்பிதங்களுக்காகவும் செலுத் துவான். இந்த கனமாக ஆராதனை முறைமைகளை நிறைவேற்றுவதற்கு ஆசாரியர்கள் மாத்திரமே நியமிக்க ப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்த முறைமையை புதிய உடன்படிக் கையின் மத்தியஸ்த்தராகிய இயேசு கிறிஸ்து மாற்றியமைத்தார். வெள் ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தல த்திலே பிரவேசித்து, தம்மை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய மீட்பை உண்டுபண்ணினார். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவ னுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு எங்கள் மனச்சாட்சியைச் செத் தக்கிரியைகளறச் சுத்திகரித்திருக்கின்றது. இவ்வண்ணமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக, ஆராதிப்பதற்கும், ஆராதனை நடப்பிப்ப தற்கும் எங்களை தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம் மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கின்றார்.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருந்து, அதன் வழியிலே வாழ்வதே செழிப்புள்ள வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 9:1-7