புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2020)

மேலான அழைப்பை பெற்றவர்கள்

யோவான் 17:3

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.


பல நெருக்கடியான சூழ்நிலைகளின் மத்தியிலே, தங்களுடைய ஒரே மகனை வளர்த்து வந்த பெற்றோர். தங்கள் பெலத்தின்படியேயும், பல வேளைகளிலே பெலத்திற்கு அதிகமாகவும் தங்கள் மகனுடைய வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று அயராது உழைத்து வந்தார்கள். அந்த உழைப்பு வெறும் பணம் அல்ல. உழைப்பின் பலனாக சொற்ப பணம் கிடைத்தது, ஆனால் அந்த உழைப்பிற் குள் தங்கள் மகனைக் குறித்த அன்பா னது நிறைவாகவே இருந்தது. இப் போது அவர்களுக்கு பாடுபட்டு உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ ர்களுடைய பிரயாசத்தின் பலனாக, அவர்களின் மகன், பெரும் உத்தியோகஸ்தனானான். வசதியான வீட்டிலே, வீட்டை பராமரிக்கும் உதவியாளருடன் வாழ்கி ன்றார்கள். அவர்களின் மகனிடமிருந்து மாதாந்தம் தேவைக்கதிகமாக பணம் வங்கிக் கணக்கிலே வந்து சேரும். ஆனால் பாசமாக வளர்த்த மகனை பார்ப்பது மிகவும் அபூர்வமாக இரு ப்பதை நினைத்து தினமும் துக்கப்படுவார்கள். அவன் பெரும் உத்தி யோஸ்தனானதினால் அவனுக்கு தன் பெற்றோரை சந்திக்க நேரமி ல்லை. இது உணர்ச்சியை தூண்டிவிடும் சம்பவம் அல்லவா! பாவத்திற் கும் சாபத்திற்கும் உட்பட்டிருந்த எங்களை மீட்கும்படியாக தம்முடைய உயிரையே பலியாக கொடுத்த இயேசுவின் மேலான அன்பை சற்று நினைத்துப் பாருங்கள். சபையில் அங்கத்தவராக உள்ளேன், காணிக்கை தசம பாகங்களை முறையாக செலுத்துகின்றேன். சபையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கின்றேன். ஆனால் என்னை மீட்டுக் கொ ண்ட தெய்வத்தின் பாதத்திலிருந்து அவருடன் பேச (ஜெபம் செய்ய) நேர மில்லை. அவர் சொல்வதை கேட்டு (வேதத்தை வாசிக்க), அவரோடு உறவு கொண்டாட, அவருடைய பிரசன்னத்தின் களிகூர நேரமில்லை. பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பைப் பெற்றிருக்கின்றீர்கள். அது சபை கட்டிடத்தையோ அல்லது சபையின் செயற்பாடுகளை குறித்த காரியமோ அல்ல. அதிலும் மேன்மையானது. அது என்னையும் உங்களையும் குறித்த காரியம். எங்கள் ஆன்மீக வாழ்வை குறித்த காரியம். நாங்கள் தேவனை அறிகின்ற அறிவிலே நாளாந்தம் வளரவேண்டும். அந்த அறிவு எங்களை திவ்விய சுபாவத்திற்கு பங்காளிகளாகும் பொருட்டு, எங்கள் மனங்களை மறுரூபமாகச் செய்யும்.

ஜெபம்:

பரம தந்தையே, என்மீது அன்புகூர்ந்து நீர் என்னை அழைத்த அழைப்பின் மேன்மையை மறந்து போகாமல், உம்மை மனதார அன்பு செய்யும் வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6