புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2020)

கிறிஸ்துவை சார்ந்த வாழ்க்கை

யோவான் 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;


வறுமைக் கோட்டிற்குள் இருக்கும் பாமர மக்கள் வாழும் ஊர் ஒன்றிற்கு மிஷனரியாக சென்ற ஒரு ஊழியர், பல கஷ்டங்கள் மத்தியிலே தேவ சேவையை செய்து வந்தார். அவருடைய சேவையின் ஆரம்ப ஆண் டுகள் மிகவும் கடினமாக இருந்தது. பல போராட்டங்களின் மத்தியிலே தன் ஊழியத்தை செய்து வந்த அந்த தேவ ஊழியர், ஜெபத்திலும் உபவாசத்திலும் வேதத்தை வாசித்து தியானிப்பதிலும் அதிகதிமாக வளர்ந்து வந்தார். பல ஆண்டுகள் சென்றபின்பு, அவ்வூரிலே ஏற்பட்ட எழுப்பு தலினால், அந்த ஊழியரின் பெயரும் அவருடைய சேவையும், அனுபவ சாட் சியும் பிரபல்யமானது. வசதியும் வாழ் க்கைத் தரமும் உயர்வடைந்தது. ஒரு சிறிய ஊரிலே இருந்த அவர் இப்போது, உலகெங்கும் சென்று வந் தார். ஒரே நேரத்திலே பல சபைகளி லிருந்து அவருக்கு அழைப்புகள் வந் ததால், அவர் எங்கு செல்வது என்று தீர்மானிக்க வேண்டியிருந்ததால், ஆங்காங்கே ஏற்பட்ட சில அசௌகரியங்களும், கருத்து முரண்பாடுக ளும் அவருக்கு பெரிதானதாக தோன்றவில்லை. காலங்கள் கடந்து அவ ருக்கு ஏற்பட்ட உலக அங்கீகாரம் குறைவுபடத் தொடங்கியபோது, செல் லும் இடமெங்கும் தன் ஆவிக்குரிய வாழ்வை தன் பேச்சினாலே நியா யப்படுத்தி, நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப் பதை அவர் உணர ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களிலே நான் என் கர்த் தராகிய இயேசுவில் ஒட்டப்பட்ட கொடியைப் போல அவரிலே சார்ந்தி ருந்தேன், ஆனால் பின்னய நாட்களிலே, அந்த ஊரில் ஏற்பட்ட எழுப் புதலினால் உண்டான மனித அங்கீகாரத்திலே சார்ந்து கொண்டேன் என் பதை உணர்ந்த போது பெரும் வேதனைப்பட்டார். பிரியமானவர்களே, நாங்கள் மிஷனரியாக பிரத்தியேகமான அழைப்பை பெற்றிருந்தாலும், அல்லது ஒரு விசுவாசியாக இருந்தாலும் எந்த நிலையிலும், குறிப்பாக எங்கள் உயர்வான நேரங்களிலே, எங்களைத் தாழ்த்தி, எங்களைக் குறித்த பிதாவாகிய தேவனுடைய சித்தம் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு காத்திருந்தேன், அதனால் வரத்தைப் பெற்றேன், அல்லது பெரும் செல்வத்தை பெற்றேன் இனி நான் எதையும் செய்யலாம் என்று வாழக்கூடாது. நாங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையிலே இருந்தாலும், எப்போதும் கர்த்தராகிய இயேசுவில் சார்ந்து வாழும் வாழ்க்கை வாழ வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என்னுடைய வாழ்க்கையில் வரும் பதவி உயர்வுகளை, செழிப்பை பின்பற்றிச் சென்று, உம்மை மறந்து போகாதபடிக்கு உணர்வுள்ள வாழ்க்கை வாழ என்னை நடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:38