புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2020)

நியாயத்தீர்ப்பின் நாள்

சங்கீதம் 9:7

கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத் தம்பண்ணினார்.


உலக பிரசித்திபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலே, பல ஆண்டுகளாக பங்குபற்றிய மனிதன், தான் பங்குபற்றிய போட்டியிலே வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டான். உலக பிரசித்தமான அந்த மனிதன், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்பு, வசதியற்ற மக்களுக்கு நன்மை பகர்க்கும் செயற்திட்டங்களை செய்து வந்தான். ஜனங்கள் மத்தியிலே நன்மதிப்பு பெற்ற அந்த மனிதனின் வாழ்க்கையில் எல்லாமே நன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அந்த குறி ப்பிட்ட விளையாட்டு போட்டிகளை ஒழுங்குபடுத்தும் உலக பிரசித்தி பெற்ற ஸ்தாபனம், பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. விளையாட்டு போட்டிகளிலே கலந்து கொண்டு தங்கப்பதங்கங்களை பல ஆண்டுகளாக தட்டிக் கொண்ட அந்த மனிதன், உலக போட்டிகளை நடாத் தும் ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட உடற்பெலத்தை ஊக்குவி க்கும் போதைவஸ்தை, தந்திரமாக உபயோகித்துள்ளார் என்பதை உறுதி செய்தார்கள். அதன் விளைவாக, அந்த மனிதனின் தங்கப் பத க்கங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டது. அவன் உயிரோடு வாழும் நாட்களில், அந்த ஸ்தாபனத்தின் எந்த போட்டிகளிலோ அல்லது ஸ்தாபனம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலோ பங்குபற்ற முடியாது என தடை செய்யப்பட்டான். அவனுக்கிருந்த நன்மதிப்பு, இப்போது அபகீர்த்தியாக மாறிவிட்டது. பாருங்கள், காலங்கள் சென்றாலும், இந்த உலகிலுள்ள ஸ்தாபனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளும் பெலனும் மட்டுமே இருக்கின்ற போதும், தாங்கள் போட்ட சட்டதிட்டங்களை மீறிய மனிதர் களை, அவர்கள் தப்பிப்போகவிடுவதில்லை. ஆண்டுகள் கடந்து சென் றாலும் ஆளுகை முடிந்து போகாத, சர்வத்தையும் படைத்த, சகலமும் அறிந்த, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நியாத்தீர்ப்பிற்கு யார் தப் பிப் போக முடியும்? ஒருவராலும் கூடாது! எனவே, கலங்காதிருங்கள், பட்ட பகல் போல உங்கள் நீதியை விளங்கச் செய்வார். அதே நேரத் திலே, உங்கள் வாழ்வில்; அறிக்கைபண்ணி விட்டுவிடாத அநீதியான செயல்கள் இருக்குமாயின், உங்களுக்கு கிடைத்த இந்த அருமையான நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஒப்புரவாக வேண்டி யவர்களுடன் ஒப்புரவாகுங்கள். மன்னிப்பை தாராளமாக கொடுங்கள், மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நாட்கள் பொல்லாதவைகளாக மாறிக் கொண்டிக்கும் உலகிலே விசுவாசத்தைவிட்டு பின்வாங்கிப் போகாமல் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 2:6

Category Tags: