புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2020)

தேவ நீதியை நிறைவேற்றுங்கள்

கலாத்தியர் 5:16

பின்னும் நான் சொல்லு கிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொ ழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.


அயலிலே வசிக்கின்ற இரு மனிதர்களுக்கிடையிலே ஏற்பட்ட அற்பமான கருத்து முரண்பாடு, வாக்குவாதமாக மாறி, அவர்கள் குடும்பங்களுக்கிடையே பெரும் பகையாக மாறிவிட்டது. நாள்பட்ட புண்களைக் போல அவர்களுக்கிடையிலே இருந்த பகை மனைந்து கொண்டே போயிற்று. சிலர் இவ்வகையான பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண வேண்டும் என்று பலவிதமான யுக்திகளை கையாளுகின்றார்கள். சிலர் மேலான அதிகாரங்களிடம் மேன் முறையீடு செய்து கொள்கின்றார்கள், வேறுசிலர் நீதிமன்றங்களிலே வழக் குகளை தாக்கல் செய்கின்றார்கள். இச் செய்கைகள் வழக்கத்திற்கு மாறனவைகள் அல்ல. இவை ஒரு நாட்டின் அடிப்படை மனித உரிமைகள். அவ்வு ரிமைகளை அனுபவிக்க குடிமக்கள் யாவருக்கும் அதிகாரம் உண்டு. இது எங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்ப ட்ட தீர்மானம். இத்தகைய சூழ்நிலைக ளிலே மனிதர்கள் யாவரும் ஏதோ ஒரு கட்டத்திலே சிக்கிக் கொள்வதுண்டு. அதற்கு எங்களில் எவரும் விதி விலக்கானவர்கள் அல்லர். வீட்டிலோ, சபை ஐக்கியத்திலோ, உறவுகள், நண்பர், அயலவர் மத்தியிலோ இத்தனை முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம்;. அவற்றுள் பல எங்கள் கட்டுப் பாட்டிற்குட்பட்டவைகள். எங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்டவைகளை தீர்த்துக் கொள்வதற்கு இந்த உலகத் திலே முறைமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. “சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனா கிலும் உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடே சகோதரன் வழக்கா டுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங் கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிரு க்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகி த்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் ந~;டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதி ல்லை? ” என்;று தேவ ஊழியராகிய பவுல் சபைக்கு அறிவுரை கூறி யிருக்கின்றார். பரம பிதாவுக்கு பிள்ளைகளாகிய நீங்கள் தேவ சாய லிலே நாளுக்கு நாள் பெருக வேண்டும். இந்த உலகத்திற்குரிய எண்ண ங்களையும் அது உண்டு பண்ணும் செயல்களையும் எங்களைவிட்டு முற் றாக களைந்து விட வேண்டும். தேவ ஆவியை பெற்ற நாங்கள் தேவ னுக்குரியவைகளையே எப்போதும் எங்களில் நடப்பிக்க வேண்டும்.

ஜெபம்:

சம்பூரணராகிய பிதாவே, இந்த உலகத்தின் முறைமைகளின்படி என் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், உம்முடைய வார்த்தையின்படி ஆவிக்கேற்றபடி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 6:12