புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2020)

உலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்

சங்கீதம் 9:8

அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.


ஒரு கிராமத்திலே பல ஆண்டுகளாக பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்த குடியானவன், அந்த கிராமத்திலுள்ள மக்களுடைய வாழ்க்கைத் தர த்திற்கு கட்டுப்படியாகும்படி நியாயமாக வியாபாரம் செய்து வந்தான். அந்த கிராமத்தில் வேறு கடைகள் இல்லையென்று அறிந்த பட்டணத்தி லுள்ள வேறொரு வியாபாரியானவன், தன்னுடைய கடையின் கிளை யொன்றை அந்தக் கிராமத்திலே ஆரம் பித்தான். வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும்படிக்கு, மலிவு விற்பனை என்ற பெயரில் பல நெறிமுறையற்ற காரியங்களைச் செய்தான். இதனால் அந்த குடியானவனின் வியாபாரம் வெகு வாய் பாதிக்கப்பட்டது. பல ஆண்டுக ளாக வியாபாரம் செய்து வந்த குடியா னவன், அந்தப் புதிய பட்டணத்து வியாபாரியை அணுகி, நீங்கள் இந்த கிராமத்தில் வியாபாரம் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை ஆனால் என்னுடைய வியாபாரமானது பாதிக்கும்படிக்கு ஏன் இப்படியான நெறிமுறையற்ற காரியங்களை செய்கின்றீர்கள் என்று கேட்டார். பட்ட ணத்து முதலாளியோ, பதிலுரையாக: இதைத்தான் “வணிக போட்டி” (டிரளiநௌள உழஅpநவவைழைn) என்று அழைப்பார்கள். இதில் என்ன தவறு என்று கேட்டான். ஆம் பிரியமானவர்களே, முறையற்ற இந்த சம்பவ த்தை சற்று சிந்;தித்துப் பாருங்கள். இன்றைய உலகிலே, வேத பிரமா ணங்களுக்கு எதிரான காரியங்களை நடப்பிக்கும்படிக்கு, பல மனிதர்கள் உலக ஞானம் போதிக்கும் கவர்ச்சிகரமான பதங்களை பயன்படுத்து கின்றார்கள். இந்த உலகின் போக்கின்படி அவை சர்வ சாதாரணமான காரியங்களாக இருக்கலாம் ஆனால் அவை தேவனுடைய வார்த்தை க்கு முரணானதாக இருக்குமாயின் அவை யாவும் அநீதியே. மற்றவர் களுக்கு சேர வேண்டிய ஆதாயத்தை எந்த முறையிலும் நாங்கள் அப கரிக்கக் கூடாது. என்னுடைய உற்பத்திச்சாலையை நான் சிறப்பாக முகாமைத்துவப் படுத்துகின்றேன் என்று மற்றவர்களுக்கு செம்மையாக சேர வேண்டிய படியை தடைசெய்வதும் அநீதியான செயல். அநீதி எல் லாம் பாவம்;தான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது (1 யோவான் 5:17). இப்படியாக வியாபாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் பல பகு திகளிலே மனிதர்கள் தேவ நீதிக்கு முரணான காரியங்களை செய்கின் றார்கள். நாகரீகம் தெரியாதவர்கள் என்று எங்களை மற்றவர்கள் ஒதுக்கி விட்டா லும், இந்த உலக போக்குகளுக்கு உடன்படாமல், தேவனுடைய வார்த் தையின் வெளிச்சத்தில் நீதியாய் வாழப் பழகிக் கொள்வோம்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, இந்த உலகத்தினாலே ஏற்றுக் கொள்ளப்படும் போக்குகளில் நான் சிக்கிக் கொண்டு, உம்முடைய நீதியை மறந்து போகாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 22:16