புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2020)

உயர்ந்த அடைக்கலம்

ஏசாயா 33:16

அவன் உயர்ந்த இடங்க ளில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண் கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடு க்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.


ஆகாயத்திலே வட்டமிடும் பருந்தைக் கண்ட, தாய் கோழியானது, தன் குஞ்சுகளுக்கு கொக்கரித்து எச்சரிப்பு விடுத்தது. உடனே, அந்த குஞ் சுகள் யாவும் உடனடியாக தாயின் செட்டைகளுக்குள்ளே ஓடிவந்து மறைந்து கொண்டது. இந்த உலகத்திலே பாவ இருள் சூழந்திருக்கின்றது. அவற்றின் மத்தியிலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்கள் நிரந்திர வசிப்பிடமாகிய பரலோக வீட்டிற்கு சென்றடையும் வரைக்கும் உலகத்தின் இருள் எங்களை மேற்கொள்ளாதபடிக்கு நாங் கள் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்த்தரை என்றும் நம் பிக்கையாக கொண்ட மனுஷன் பாக் கியவானாய் இருக்கின்றான். கர்த்த ருடைய கண்கள் அவன்மேல் நோக்கமாயிருக்கின்றது. எனக்கு எல்லாம் தெரி யும், நான் எதையும் சமாளிப்பேன் என்று வாழ்பவன் சுயநம்பிக்கையுடை யவன். கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருக்கின்றவன், அவருடைய வார்த் தைக்கு கீழ்ப்படிகின்றவனாக இருக்கி ன்றான். இவ்வண்ணமாக கர்த்தரு டைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவ ருடைய வழிகளிலே நடக்கின்ற மனுஷனைக் குறித்து “அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனு டைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக் கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. கர்த்தருடைய வழியில் நடக்கின்ற மனுஷனுடைய நாளாந்த வாழ்க்கை இந்த பூமியிலே எப்படியாக இருக்கும்? அவனுடைய வாழ்வில் சுயநீதிக்கு இடமில்லை, அவன் தேவன் நீதியை நிறை வேற்றுகின்றவனாயிருப்பான். அவன் வாயில் வஞ்சகம் இருக்கா து, எப்போதும் செம்மையானவைகளையே பேசுவான். மற்றவர்களை ஒடுக்குவதால் தனக்கு கிடைக்கும் ஆதாயத்தை வெறுக்கின்றான். அவன் பரிதானங்களை (லஞ்சம்) வாங்காதபடிக்கு தன் கைகளை உதறி விடுகின்றான். பொல்லாத யோசனைகளுக்கு தன் செவிகளை விலக்குகின் றான். தன் கண்களால் தீமையானவைகளையும் அசுத்தங்களையும் அவன் பார்க்க விரும்புவதில்லை. இவ்வண்ணமாக அவன் தேவனுடைய வார் த்தைக்கே எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கின்றவனாய் இருக்கின்றான்.

ஜெபம்:

அடைக்கலமான அநாதி தேவனே, உம்மை என்றென்றும் அடைக்கலமாக கொண்டிருக்கும்படி உம்முடைய சத்தத்திற்கு நான் தாமதமின்றி கீழ்ப்படிந்து நடக்கும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5