புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2020)

வாழ்வு தரும் அடிப்படை உண்மைகள்

கலாத்தியர் 6:7

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.


கலப்பையினால் வயலை உழுது, கைகளினால் விதைகளைத் தூவி, கைளினாலே அறுவடை செய்த காலம் மலையேறிவிட்டது. ஒரு வயலை அல்ல ஒரு கிராமத்தின் விஸ்தாரத்தையே ஒரே நாளில் உழுது, விதைக்கக்கூடிய நவீன இயந்திரங்கள், இன்று விவசாயத்திலே உபயோத்திலுள்ளதை ஒரு வயதான விவசாயி கண்டு கொண்டார். காலங்கள் மாறிப்போய்விட்டது. மனிதர்கள் தங்கள் நாளாந்த அலு வல்களை செய்து முடிக்கும் முறைமைகளும் மாறிக் கொண்டே இருக்கி ன்றது. ஆனால் வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை யாரால் மாற்ற முடியும்? உலகம், நாகரீகம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டி ருந்தாலும், மனிதர்கள் தங்கள் வயி ற்றை நிரப்ப ஏதாவது ஆகாரத்தை உண்ண வேண்டும் என்னும் நிலை மையை மாற்ற முடியாது. அரிசியை இடித்து மாவாக்கி தங்கள் ஆகா ரங்களை தயாரிக்கும் எளிமையான வாழ்க்கையை வாழும் குடும்பங்களாக இருந்தாலும், உச்சிதமாக ஆகாரங் கள் பரிமாறப்படும் இடாம்பீகரமான மாளிகைகளாக இருந்தாலும், விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகளாக இருந்தாலும் தங்கள் வயிற்றை நிரப்ப ஏதோ ஆகாரத்தை உட்கொள்கின்றார்கள். விவசாய முறைமைகள் மாற்றப்பட்டிருக்கலாம், ஆனால் விவசாயி எதை விதை க்கின்றானோ, அதையே பன்மடங்காய் அறுப்பான் என்னும் அடிப்படை உண்மையை மாற்ற முடியுமோ? அவனவனுடைய கிரியைகளுக்குதக்க பலனை அவனவன் பெற்றுக் கொள்ளும் காலம் சமீபித்திருக்கின்றது. நாங்கள் வாழும் வீடு, அதனுள்ளே இருக்கும் உபகரணங்கள், தொட ர்புச் சாதனங்கள், அணியும் ஆடைகள், நாங்கள் மற்றவர்களுக்கு காண்பிக்கும் வெளித் தோற்றங்கள் இப்படியாக எங்கள் வாழ்க்கையின் தராதரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவன் பிதாhகிய தேவனுடைய சித்தத்தை தன் சொந்த வாழ்வில் நிறை வேற்ற வேண்டும். இந்த அடிப்படைச் சத்தியத்தை யாராலும் மாற்ற முடியாது. பிரியமானவர்களே, மாறிப் போகும் இந்த உலகத்தை நோக் கிப் பார்க்காமல், எப்போதும் எங்களை தெரிந்து கொண்ட பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை எங்கள் சொந்த வாழ்வில் நிறைவேற்றுகி ன்றவர்களாக வாழ்வோமாக.

ஜெபம்:

நித்தியமான தேவனே, நீர் நியமித்திருக்கும் வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறந்து, இந்த உலகத்தின் போக்குகளினால் மாய்ந்து போகாமல், உம் சித்தத்தை நிறைவேற்ற எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 20:12