புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2020)

நாகரீகமான உலகம்

யாக்கோபு 3:5

அப்படியேஇ நாவானதும் சிறிய அவயவமாயிருந் தும் பெருமையானவைக ளைப் பேசும். பாருங்கள்இ சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளு த்திவிடுகிறது!


தெரு ஓரமாக நின்று தன் நண்பர்களுடன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த தன் பேரனின் வார்த்தைப் பிரயோகங்கள் வழி விலகிச் செல்வதை, முற்றத்தில் இருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த பாட்டனார் கேட்டுக் கொண்டிருந்தார். பேரனின் நண்பர்கள் சென்ற பின்பு, அவனை அழைத்து, தம்பி, உன் நண்பர்களுடன் நீ சுவாரசிய மாக பேசுவதில் தவறில்லை, ஆனால் உன் வாயின் வார்த்தைகள் பிசகாதப டிக்கு பார்த்துக் கொள். ஆகாத சம்பா ~ணைகள் நல் ஒழுக்கத்தை கெடுக் கும் என்று அறிந்து கொள் என்று கூறினார். பாட்டா, நீங்கள் இன்னும் உங்கள் வாலிப நாட்களில் நிற்கின்றீர் கள், இது புது யுகம். நாகரீகமான உலகம். இன்றைய உலகில் அற்ப மான காரியங்களை யாரும் பெரிது படுத்துவதில்லை. நான் கூறியவற்றை என் நண்பர்கள் நன்றாக அறிவார்கள் என்று பேரன் பதிலளித்தான். தம்பி, நான் வாலிபனாக இருந்த நாட்களிலே, இருந்த புகையிரதவண்டி மிகவும் மெதுவாகவே ஓடிச் செல்லும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று அதி வேகமாக செல்லும் புகையிரத வண்டிகளும் உண்டு. ஆனாலும், அது எவ்வளவு நவீனமாக இருந்தாலும், போடப்பட்ட தண்டவாளத்திலேயே ஓடிச் செல்ல வேண்டும். அதி வேகமாக செல்வதால் சிறிய தவறுகள் பெரிய பாதிப்பை கொண்டு வரும் என்று கூறினார். ஆம், பிரியமானவர்களே, தேவனுடைய பரிசுத்தம், காலத்தோடு மாறிப் போவதில்லை. அற்பமாக ஆரம்பிக்கப்படும் நன்மையான காரியங்களுக்கும், அற்பமாய் தோன்றும் தீமையான காரியங்களுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு. பின்பு அவை வள ர்ந்து பெருகி அதன் பலனை கொடுக்கும். இருதயத்தின் நிறைவி னாலே வாய் பேசும். சிறிய நெருப்பு பெரிய காட்டுத்தீயை உண்டாக்கி ன்றது போல, மாறுபாடான சிறிய வார்த்தைகள் பெரும் விபரீதங்களை உண்டாக்கும். நல்ல மனு~ன் தன் இருதயமாகிய நல்ல பொக்கி~த் திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான். மனிதன் பேசும் எல்லா வார்த்தைகளுக்கும் கணக்கு ஒப்பு விக்கும் நாள் ஒன்று உண்டு. எனவே, நன்மையான வார்த்தைகளையே பிரயோஜனம் உண்டாகும்படி பேசக்கடவோம்.

ஜெபம்:

வார்த்தையில் உண்மையுள்ள தேவனே, அற்பமானவைகள் என்று ஆகாத சம்பாஷணைகளிலே நான் என்னை வஞ்சித்துக் கொள்ளாதபடிக்கு, என் வாயின் வீண் வார்த்தைகளிலிருந்து காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:24