புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2020)

இயேசுவின் சமாதானம்

யோவான் 14:27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, இந்த பூவுலகிலே வாழ்ந்த நாட் களிலே, தம்முடைய திருப்பணிக்காக ஊழியர்களை தெரிந்து கொண் டார். அன்றைய உலகத்திலே, வசதியுள்ள உயர் வர்க்க குழுக்களை சேர்ந்த பிரமுகர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், கர்த்தர் தாமே அன்றைய உலகத்திலே கல்லாதவர்கள் என்று கணிக்கப்பட்ட எளிமையான குடிமக்களை தம்முடைய பணிக்காக பிரித்தெடுத்தார். (அப் 4:13, லூக்கா 10:21) இவர்கள் செல்வந்த ர்கள் அல்லர், தங்கள் நாளாந்த ஊதி யத்திலே பிழைத்துக் கொண்டவர்கள். கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தை விட்டு போகும் வேளை வந்த போது, தம்முடைய ஊழியர்களைப் பார்த்து: “சமாதானத்தை உங்களுக்கு வைத்து ப்போகிறேன், என்னுடைய சமாதா னத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்கா மலும் பயப்படாமலுமிருப்பதாக.” என்று கூறினார். இயேசு கூறிய இந்த வார்த்தையை, அவர்களுடைய வாழ்க்கையின் தராதரத்தோடு சற்று ஆராய்ந்து பாருங்கள். இவர்களிடம் உலக ஐசுவரியம் இருக்கவில்லை. அன்றைய உலக வழமையின்படி இவர்கள் கல்வி அறிவில்லாத வர்கள். இவர்கள் இயேசுவோடு இருந்ததால், அதிகாரிகளில் பலர் இவ ர்களுக்கு எதிராக இருந்தார்கள். அதாவது, அவர்கள் இருந்த சூழ்நி லையில், இந்த உலக முறையின்படி சமாதானமாக இருப்பதற்கு எந்த வழியும் இல்லை. ஆனால், கர்த்தராகிய இயேசு தம்மிடம் இருந்த சமா தானத்தை அவர்களுக்காக வைத்து சென்றார். சத்திய ஆவியாகிய தேற் றரவாளனை அனுப்புவேன், அவர் வந்து உங்களை சகலவற்றிலும் நட த்துவார் என்று வாக்களித்தார். சத்திய ஆவியானவர் வந்தபோது, அவ ர்கள் பெலனடைந்தார்கள். இன்னும் அதிகமாக இந்த உலகத்தினால் பகைக்கப்பட்டு, மரண பரியந்தமும் உபத்திரவங்களை சகித்தார்கள். ஆனால், கர்த்தராகிய இயேசு வைத்துச் சென்ற சமாதானத்தை அவ ர்களிடமிருந்து ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியவில்லை. இன் றைய உலகிலே, உங்களுடைய நிலை என்ன? தேவ சமாதானம் உங்க ளில் நிலைத்திருப்பதற்கு இந்த உலக தகுதிகள் அவசியமானதல்ல. தம் முடைய சமாதானத்தை வைத்துச் சென்ற இயேசு, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வழியாக உங்களை திடப்படுத்தி நடத்திச் செல்வாராக.

ஜெபம்:

அன்பின் பிதாவே, சூழ்நிலைகளால் தளர்ந்து போகாதபடிக்கு, உம்முடைய குமாரனாகிய இயேசு வழியாக பெற்ற சமாதானத்தில் நாங்கள் நிலைத்திருக்கும்படிக்கு எங்களை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோசேயர் 3:15