புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 04, 2020)

வசதிகள் நிறைவு தருவதில்லை

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.


நாளை என் நிலை என்ன? என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? என்ற ஏக்கம் பலரை வாட்டுகின்றது. வருங்கால பயங்கள்: வறியவர்கள், நாளாந்த, மாதாந்த ஊதியத்தில் தங்கி இருக்கின்றவ ர்களை மட்டுமல்ல வசதியாக வாழும் குடும்பங்களையும் வாட்டுகின்றது. வாழ்க்கையில் உண்டான வசதியினால், பலர் சிறு வயதிலிருந்தே தேவ பயம் அற்றவர்களாக வளர்ந்து வருகின்றார்கள். அவர்கள் தேவன் யார் என்று அறிந்திருந்தும், தங்களுக்கு செம் மையாக தோன்றும் வழிகளை தெரி ந்து கொள்வதினால், கண்ணிகளிலே அகப்பட்டு விடுகின்றார்கள். இந்த உல கத்தினால் உண்டாகும் செழிப்பு ஒரு மனிதனுக்கு செல்வந்தன் என்ற அந்த ஸ்த்தைக் கொடுக்கலாம். இந்த உலகத் தினால் உண்டான யாவற்றையும் அவ னால் விலை கொடுத்து வாங்க முடி யும். ஆனால் நிலையான சமாதானம் இந்த உலகத்திற்குரியதல்ல. இந்த உல கத் தினால் உண்டானதும் அல்ல. ஆகவே, அழிந்து போகும் இந்த உலகத்தின் சம்பாத்தியத்தினால், அழியாத நிலையான பரலோக சமாதானத்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு வேளை இந்த உலகத்தினால் உண்டான தரத்தின்படி: வறியவர்கள், அல்லது நாளாந்த, மாதாந்த ஊதியத்தில் தங்கியிருப்பவ ர்கள் அல்லது வசதியாய் வாழ்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக் கலாம். எப்படி இருப்பினும் தேவன், இன்று உங்கள் வாழ்வில் மனச் சமாதானத்தை கொடுக்க சித்த முள்ளவராக இருக்கின்றார். காலங்கள் கடந்து செல்லும் போது எங்கள் உலக வாழ்க்கைத்தரம் உயர்வடைய லாம் அல்லது தாழ்ந்து போகலாம் ஆனால் தேவன் தரும் மனத்திரு ப்த்தி இந்த உலகத்தின் தராதரத்துடன் மாறிப் போவதில்லை. இந்த உலகத்தினால் உண்டாகும் உபத்திரவங்களினால் குலைந்து போவதி ல்லை. நிலையான பரலோக ராஜ்யத்திற்குரியவைகளை நிலையற்ற உலக ராஜ்யத்திற்குரியவைகள் மேற்கொள்ள முடியாது. முதலாவது வாழ்க்கையின் வசதியைத் தேடுவோம் பின் தேவனுக்குரியவைகளை தேடுவோம் என்ற எண்ணமுடையவர்கள் தங்களுக்கு செம்மையாக தோன்றும் வழிகளை தெரிந்து கொள்கின்றவர்களுக்கு ஒப்பாய் இருக் கின்றார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை எங்களைவிட்டு அகற்றி நிலை யான தேவ ராஜ்யத்திற்குரியவைகளை தேடுவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, நிலையற்ற உலக வாழ்க்கைக்குரியவைகளை என் வாழ்வில் நான் மேன்மைப்படுத்தாமல், தேவ ராஜ்யத்திற்குரிய மேன்மையானவைகளை நாடித்தேட என்னை உணர்வுள்ளவனா(ளா)க் கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 147:9